அடுத்தடுத்து வெற்றிப் படியில் சந்திரயான் 3.. நிலவை நோக்கிய பயணத்தில் முன்னேற்றம்!

நிலவை ஆராய சென்றுள்ள சந்திரயான் 3 விண்கலம், நிலவை மேலும் நெருங்கியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், தற்போது நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வலம் வந்து கொண்டிருக்கிறது. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் பயணப்படும் உயரம், மெல்ல மெல்ல குறைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மூன்றாம் முறையாக சந்திரனின் சுற்றுவட்ட பாதை உள்நோக்கி குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

சந்திரயான் 3
சந்திரயான் 3

அடுத்ததாக வரும் 16ஆம் தேதி காலை நிலவின் நான்காவது சுற்று வட்டப் பாதையான 100 கிலோமீட்டர் உயரத்திற்கு விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையை குறைக்கும் பணிகள் நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 17ஆம் தேதி சந்திரயான் விண்கலத்தில் உள்ள உந்துவிசை அமைப்பு மற்றும் லேண்டர் தனியாக பிரியும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

சந்திரயான் 3
சந்திரயான் 3 நிலவிற்கு அனுப்பப்பட்டதன் உண்மையான காரணம் தெரியுமா? அதென்ன விண்வெளி பொருளாதாரம்?

ஆகஸ்ட் 20ஆம் தேதி சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் மேற்பரப்பில் 30 கிலோமீட்டர் உயரத்திற்கு குறைக்கப்படும். ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 5:47 மணிக்கு சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com