நிலவில் பிரக்யான் ரோவரின் சாமர்த்தியம்.. ISRO வெளியிட்ட தகவல்!

நிலவை ஆய்வுசெய்து வரும் பிரக்யான் ரோவர், நிலவின் பள்ளத்தை உணர்ந்து பாதையை மாற்றியுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

41 நாட்கள் பயணத்திற்குப் பிறகு சந்திரயான் 3 விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர், கடந்த 23ஆம் தேதி மாலையில் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரக்யான் ரோவர், நிலவின் தரைப்பரப்பில் தடம்பதித்து, தனது ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது.

பிரக்யான் ரோவர்
‘தெற்கின் ஒளி’ சந்திரயான் 3 : மண்ணில் தொடங்கி விண்ணில் தொடரும் பயணம்... முழு தொகுப்பு!
Chandrayaan 3
Chandrayaan 3Puthiya thalaimurai

இந்நிலையில், நேற்று நிலவில் தனக்கு முன் இருந்த 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை ரோவர் கண்டதாகவும், பூமியில் இருந்து அனுப்பப்பட்ட கட்டளைக்கு ஏற்ப தனது பாதையை மாற்றியுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது ரோவர் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டிருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com