ஹலோ சொல்லுமா விக்ரம்? - இன்று முடிகிறது லேண்டரின் ஆயுள்

ஹலோ சொல்லுமா விக்ரம்? - இன்று முடிகிறது லேண்டரின் ஆயுள்

ஹலோ சொல்லுமா விக்ரம்? - இன்று முடிகிறது லேண்டரின் ஆயுள்
Published on

சந்திரயான் - 2 திட்டத்தின் கீழ் நிலவுக்கு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு இன்றுடன் முடிகிறது.

நிலவின் தரையில் விக்ரம் லேண்டர் விழுந்து கிடப்பதாக இஸ்ரோ கூறியிருந்த நிலையில் அதனுடன் தொடர்பு கொள்ள இறுதிக்கட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன. நாளை முதல் சந்திரனில் 14 நாள் இரவுக் காலம் தொடங்கிவிடும் என்பதால் விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வது இயலாததாகி விடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அடுத்த 14 நாட்கள் நிலவில் சூரிய ஒளி இருக்காது என்பதால் மின் சக்தியை பெற இயலாது என்பதுடன் கடும் குளிர் நிலவும் என்பதால் மின்னணு பாகங்கள் செயலிழந்துவிடும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

இதற்கிடையில் நிலவின் தரையில் விக்ரம் லேண்டர் விழுந்தாகக் கூறப்படும் இடத்தை நிலவை சுற்றி வரும் தங்கள் ஆர்பிட்டர் படம் எடுத்துள்ளதாக நாசா விஞ்ஞானி ஜான் கெல்லர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே எடுத்த படத்துடன் இப்படத்தை ஒப்பிட்டு லேண்டர் தெரிகிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். 
லேண்டருடன் எப்படி தொடர்பு துண்டிக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். கடந்த 7ம் தேதி சந்திரயான் -2 வில் உள்ள விக்ரம் லேண்டரால் நிலவின் தரையில் திட்டமிட்டபடி இறங்க முடியவில்லை. நிலவிற்கு மிக அருகில் சென்று விட்ட லேண்டர் திடீரென தரையில் விழுந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதனுடன் சிக்னல் துண்டிக்கப்பட்டு விட்ட நிலையில் அதை திரும்ப ஏற்படுத்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகள் செய்து வந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com