சனிக்கோளின் இருண்ட விடியல் புகைப்படம்

சனிக்கோளின் இருண்ட விடியல் புகைப்படம்
சனிக்கோளின் இருண்ட விடியல் புகைப்படம்

சனிக்கோளில் விடியல் எவ்வாறு இருக்கும் என்பது போன்ற புதிய புகைப்படம் ஒன்றை நாசா அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் மார்ச் மாதம் 31 ஆம் தேதி எடுக்கப்பட்டதாகும்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, சனிக்கோள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக 1997 ஆம் ஆண்டு காஸினி விண்கலத்தை அனுப்பியது. ஏழு ஆண்டுகள் தொடர் பயணத்துக்குப்பின், 2004 ஆம் ஆண்டு சனிக்கோளின் சுற்றுவட்டப்பாதையை காஸினி விண்கலம் அடைந்தது. சனி மற்றும் அதன் துணைக்கோள்கள் குறித்த தகவல்களை, கடந்த 13 ஆண்டுகளாக இந்த விண்கலம் தொடர்ந்து அனுப்பி வருகிறது.

இந்நிலையில், சனிக்கோளின் புதிய புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. சனிக்கோளில் விடியல் எப்படி இருக்கும் என்பதை இந்தப் புகைப்படம் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும், இருள் சூழ்ந்த சனிக்கோளை சுற்றியிருக்கும் பனிப்படல வளையங்களை 20 ஆண்டுகளுக்கு பின் காஸினி அழகாகப் படம்பிடித்துள்ளது. சனிக்கோளிலிருந்து சுமார் 6,20,000 மைல் தூரத்தில் இருந்து இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கோளுக்கும் அதன் வளையத்துக்கும் இடையே மொத்தம் 22 முறை டைவ் செய்யும் காஸினி விண்கலத்தின் பயணத்துக்கு 'கிராண்ட் ஃபைனல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com