வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது கார்டோசாட் 3 செயற்கைக்கோள் !

வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது கார்டோசாட் 3 செயற்கைக்கோள் !
வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது கார்டோசாட் 3 செயற்கைக்கோள் !

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் மூலமாக ஏவப்பட்ட கார்டோசாட் 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைக்கோள்களையும் அந்தந்த சுற்றுவட்டப் பாதையில் இன்னும் சற்று நேரத்தில் நிலை நிறுத்தப்படும்.

1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன கார்டோசாட் 3 செயற்கைக்கோள், புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலைநிறுத்தப்பட்டது. அங்கிருந்தபடி, புவியைக் கண்காணிப்பதுடன் உயா் தரத்திலான புகைப்படத்தை எடுத்தனுப்பும் திறன் கொண்டதாகும். 

குறிப்பாக வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியை தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதோடு, இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாகப் படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். இது 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் எனவும் இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com