கார்பன் டை ஆக்சைடை எரிபொருளாக மாற்றிக் காட்டிய விஞ்ஞானிகள்
கார்பன் டை ஆக்சைடு வாயுவினை (CO2) எரிபொருளாக மாற்றும் நானோ பார்ட்டிகல்ஸ் எனப்படும் நுண்துகள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், கார்பன் டை ஆக்சைடை மீத்தேனாக மாற்றும் முறையைக் கண்டறிந்துள்ளனர். புறஊதாக் கதிர்களுடன் கூடிய வெளிச்சத்தை மட்டுமே வேதியியல் ஊக்கியாகக் கொண்டு இந்த முறையை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் உலக அளவில் ஏற்படும் மாசுபாட்டுக்கு முக்கிய காரணியாக விளங்கும் கார்பன் டை ஆக்சைடினை மீத்தேனாக மாற்ற முடியும். இதனால் சுற்றுச்சூழல் சீர்கேட்டினையும் கட்டுப்படுத்த முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
ரோடியம் என்று அந்த நுண்துகள் மூலம் நிகழ்த்தப்படும் வேதிவினையால் பெரும்பாலான எரிபொருள்களின் மூலமாகக் கருதப்படும் மீத்தேன் வாயுவை உருவாக்க முடியும் என்று டியூக் பல்கலைக்கழக வேதியியல் துறையினர் நிரூபித்துள்ளனர்.