\
நவராத்திரிக்காக பிஎஸ்என்எல் புதிய ஆஃபர்

நவராத்திரிக்காக பிஎஸ்என்எல் புதிய ஆஃபர்

நவராத்திரிக்காக பிஎஸ்என்எல் புதிய ஆஃபர்
Published on: 

நவராத்திரி பண்டிகையையொட்டி பிஎஸ்என்எல், ’தசரா விஜய்’ என்ற புதிய ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ்களுக்கு 50 சதவிகிதம் வரை கேஷ்பேக் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

’தசரா விஜய்’ என்ற திட்டத்தின் கீழ் குரல்வழி அழைப்புகளுக்கு செய்யப்படும் ரீசார்ஜ்களுக்கு 50 சதவிகிதம் வரை கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த திட்டம் செப்டம்பர் 25-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. குரல்வழி அழைப்புகளுக்கு ரூ. 42, 44, 65, 69, 88 மற்றும் 122 ஆகியவற்றிற்கு ரீசார்ஜ் செய்யப்படும் போது 50 சதவிகிதம் வரையிலான கேஷ்பேக், டாக்டைமில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com