இன்னும் 2 ஆண்டுகளுக்குள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சேட்டிலைட் ஃபோன் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக, பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
சேட்டிலைட் ஃபோன்கள் புயல், மழை என எல்லா கால நிலைகளிலும் தடையின்றி செயல்படும் என்று பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். விமானங்கள் மற்றும் கப்பல்களில் இருந்தும் இந்த வகை ஃபோன்களை பயன்படுத்த முடியும். இவ்வகை தொலைபேசிகள் செயற்கைக் கோளில் இருந்து நேரடியாக சிக்னல்களை பெறுவதால் தடையின்றி இயங்க முடிகிறது.
இந்த ஃபோன்கள் முதலில், போலீஸ் துறை, ரயில்வே, எல்லைப்பாதுகாப்பு படை உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு வழங்கப்படும். பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.