\
bsnl
bsnlweb

ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. BSNL -இன் அதிரடி அறிவிப்பு!

பிஎஸ்என்எல் அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை அறிவித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Published on

மற்ற நெட்வொர்க் நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு பிறகு பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை பயன்படுத்த பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். அவர்களை தொடர்ந்து கவரும் வகையில் புதுப்புது அறிவிப்புகளை பிஎஸ்என்எல் அறிவித்து வருகிறது.

bsnl
பகிரப்படும் WhatsApp பயனர்களின் தரவுகள்; மெட்டாவுக்கு ரூ213 கோடி அபராதம் விதித்த CCI.. என்ன நடந்தது?

ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய அறிவிப்பின் படி, அதன் ஃபைபர் இணைய இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், 500க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை இலவசமாக பார்க்கும் வசதியை தமிழகம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்த உள்ளது.

சோதனை அடிப்படையில் இத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை தொடர்பாக, பிஎஸ்என்எல் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், தமிழில் உள்ள பிரபல கட்டண தொலைக்காட்சிகளின் லட்சினைகளும் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தையும் இலவசமாக பார்க்கும் வாய்ப்பு, பிஎஸ்என்எல் ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com