டெக்
காற்றிலிருந்து நீரை உருவாக்கும் ஹைடெக் வாட்டர் பாட்டில்
காற்றிலிருந்து நீரை உருவாக்கும் ஹைடெக் வாட்டர் பாட்டில்
அடர்த்தியான காற்றிலிருந்து நீரை உருவாக்கும் அதிநவீன வாட்டர் பாட்டிலை ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிண்டஸ் எனும் நிறுவனம் வடிவமைத்துள்ள இந்த ஹைடெக் வாட்டர் பாட்டில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி அதனை நீராக மாற்றுகிறது. சூரிய மின்சக்தி உதவியுடன் இயங்கும் இந்த வாட்டர் பாட்டில் ஒரு லேயருடன் இணைக்கப்பட்டுள்ளது. மூன்றுக்கும் மேற்பட்ட அடுக்குகள் கொண்ட அந்த லேயரில் காற்று படும்போது, அதன் வேகம் குறைக்கப்பட்டு, அதிலுள்ள நீர் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட அந்த நிறுவனம் நிமிடத்துக்கு ஒரு துளி நீரைச் சேமிக்கும் இந்த வாட்டர் பாட்டிலை வடிவமைத்துள்ளது.