BOULTன் அல்டிமேட் TWS Astra, Sterling PRO வெளியீடு..!

போல்ட் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புளூட்டூத் ஸ்மார்ட் வாட்ச், ஸ்டெர்லிங் புரோ ஸ்மார்ட் வாட்ச் இவை இரண்டும் ஒரு சிறந்த ஸ்டெய்லுடன் 100 க்கும் மேற்பட்ட விளையாட்டு அம்சங்களை கொண்டு பிரத்தியேக முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அஸ்ட்ரா Tws, ஸ்டெர்லிங் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் ,வயர்லெஸ் இயர்பட்
அஸ்ட்ரா Tws, ஸ்டெர்லிங் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் ,வயர்லெஸ் இயர்பட்போல்ட்-

இந்தியாவின் அதிவேகமாக வளர்ந்துவரும் நிறுவனமான போல்ட் தற்போது தனது புதியா தயாரிப்பான ஸ்டெர்லிங் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மற்றும் அஸ்ட்ரா, கேமிங் BT வயர்லெஸ் இயர்பட்களை போன்றவற்றை செப்டம்பர் 2 மற்றும் 6 ஆம் தேதிகளில் அறிமுகப்படுத்துகிறது. இரண்டு தயாரிப்புகளும் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு ஆகியவற்றின் சிறந்த கலவையாகும். ஸ்டெர்லிங் ப்ரோ & அஸ்ட்ரா போன்றவை நுகர்வோரின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

BOULT ன் ஸ்டெர்லிங் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் 466x466 பிக்சல்களையும் 1.43 இன்ச் AMOLED HD டிஸ்பிலேவை கொண்டுள்ளது. இது 800 nits என்ற விகிதத்தில் டிஸ்ப்ளே பிரகாசத்தையும் கொண்டுள்ளது.

பிரீமியம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆன இந்த ஸ்மார்ட்வாட்ச் கருப்பு மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஒற்றை-சிப் BT 5.3 தொழில்நுட்பம், பிரத்யேக ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோஃபோன் மூலம் தடையற்ற புளூடூத் அழைப்பை வழங்குகிறது. இந்த கண்டுபிடிப்பு உங்கள் மணிக்கட்டில் இருந்து நேரடியாக தெளிவான உரையாடல்களை உறுதி செய்கிறது.

ஸ்மார்ட்வாட்ச்
ஸ்மார்ட்வாட்ச் போல்ட்-

போல்ட்-ன் ஸ்டெர்லிங் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் விரிவான சுகாதார கண்காணிப்பு அம்சங்களையும் வழங்குகிறது. இவை இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் SpO2 இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு முதல் இரத்த அழுத்த கண்காணிப்பு மற்றும் தூக்க பகுப்பாய்வு என்று பயனர்களின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்தை செலுத்துகின்றது. பெண்களுக்காக சீரான வாழ்க்கை முறையை பராமரிக்க உதவும் பெண் மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு, குடிநீர் நினைவூட்டல் போன்ற தனித்துவமான அம்சங்களையும் கொண்டுள்ளது.

ஸ்டெர்லிங் ப்ரோவானது உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கென்று பிரத்தியேகமாக 100 க்கும் மேற்பட்ட விளையாட்டு முறைகளை கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், IP68 வாட்டர்- ரெசிஸ்டண்ட் கொண்டுள்ளதால் தண்ணீர் , வெப்பம் என்று எதுவாக இருந்தாலும் அவற்றை தாங்கும் சக்தியை கொண்டுள்ளது. BOULT இன் ஸ்டெர்லிங் ப்ரோ 250க்கும் மேற்பட்ட கிளவுட் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அஸ்ட்ரா TWS, இந்த வகையிலான ஸ்மார்ட் வாட்சுகள் பிரத்தியேகமாக விளையாடின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்னல் வேக இணைப்புக்களை கொண்ட இவை அற்புதமான Blink & Pair தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.கருப்பு மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் ஸ்டெர்லிங் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் ஆனது 2499 என்ற விலையில் அற்புதமான AMOLED டிஸ்ப்வை கொண்டு தெளிவான காட்சிகளை நாம் பெற்றிட வழிவகை செய்கிறது. இந்த ஸ்மார்ட் வாட்சானது மிகவும் வசிகரிக்கும் மெட்டாலடிக் ஸ்டார்ப் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது போல்ட்டின் அஸ்ட்ரா TWS ஆனது எல்இடி விளக்குகளுடன் 48 மணிநேரம் விளையாடும் அம்சத்தினைக் கொண்டு 1399 என்ற விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போல்ட்ன் அஸ்ட்ரா TWS சிறந்த ஆடியோ அமைப்பை கொண்டு வியக்கத்தக்க 48 மணிநேம் தொடர்ந்து விளையாடுவதற்கான நேரத்தினையும் வழங்குகிறது. மேலும் Blink & Pair தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டு உங்களது ஸ்மார்ட்போன் அல்லது பிற சாதனங்களுடன் எந்த ஒரு சிக்கல்கள் இல்லாமலும் இணைத்துக் கொள்ளலாம்.

இயர்பட்
இயர்பட்போல்ட்

நீங்கள் தேர்ந்தெடுத்த சாதனத்தில் புளூடூத் மெனுவைப் பயன்படுத்தி, இயர்பட்களின் அமைப்புகளை எந்த ஒரு சிக்கலும் இல்லாமலும் செய்து கொள்ளலாம். மிகவும் விரைவாக 10 நிமிடங்களில் சார் செய்து கொள்ளலாம். மேலும், இயர்பட்கள் பேட்டரி அளவைக் குறிப்பதற்காக LED விளக்குகளும் காணப்படுகின்றன.

கூடுதலாக, அதன் பூம்எக்ஸ் தொழில்நுட்பம் அதிவேக ஆடியோ அனுபவத்தை உறுதி செய்து , IPX5 வாட்டர்- ரெசிஸ்டண்டை கொண்டுள்ளதால் வியர்வை மற்றும் வெப்பத்தினால் ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாது இது மூன்று வெவ்வேறு கண்கவரும் வண்ணமான பிளாக் க்ளோஸ், ஒயிட் ஓபல், ஸ்மோக்கி மெட்டல் போன்ற நிறங்களில் காணப்படுகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com