பத்து லட்சம் கார்களை திரும்பப்பெறுகிறது பி.எம்.டபிள்யூ

பத்து லட்சம் கார்களை திரும்பப்பெறுகிறது பி.எம்.டபிள்யூ

பத்து லட்சம் கார்களை திரும்பப்பெறுகிறது பி.எம்.டபிள்யூ
Published on

தீப்பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறி பத்து லட்சத்துக்கும் அதிகமான டீசல் கார்களை திரும்பப்பெற போவதாக பி.எம்.டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சொகுசு கார்கள் என்றால் தவிர்க்கமுடியாத பெயர் பி.எம்.டபிள்யூ. கார் பிரியர்களின் பிடித்தமான இந்த நிறுவனம் ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள முனிச் என்ற நகரத்தை மையமாக கொண்டு இயங்குகிறது. பல வெற்றிகரமான மாடல்களை வெளியிட்டுள்ள பி.எம்.டபிள்யூ நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தீப்பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறி பத்து லட்சத்துக்கும் அதிகமான டீசல் கார்களை திரும்பப்பெற போவதாக அறிவித்துள்ளது. 

சில டீசல் கார்களின் புகைபோக்கிக்கான கூலிங் திரவம் வடிவமைப்புக்கு மாறாக வெளியாவதால் தீப்பிடிக்க வாய்ப்புள்ளதால் கார்களை திரும்பபெறுவதாக அறிவித்துள்ளது. கார் உரிமையாளர்களை தொடர்புகொண்டு பிரச்னை குறித்து விளக்கம்  அளிக்கப்பட்டுள்ளதாகவும், கார்களை சோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்களின் பாதிப்புக்குள்ளான குறிப்பிட்ட பகுதி முழுவதும் சோதனை செய்யப்படும். பழுதான பாகங்கள் உடனடியாக நீக்கப்பட்டு வேறு பாகங்கள் பொருத்தி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே பிரச்னையால் ஆகஸ்ட் மாதத்தில் ஐரோப்பா மற்றும் சில ஆசிய நாடுகளில் 4 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான டீசல் கார்களை திரும்ப பெற்றுள்ளதாகவும் இந்த வருடத்தில் தெற்கு கொரியாவில் 30 கார்கள் தீப்பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உலக அளவில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான டீசல் கார்கள் தீப்பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறி திரும்ப பெறப்பட உள்ளதாகவும் பி.எம்.டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com