புதிய வசதிகளுடன் அறிமுகமாகிறது கூகுளின் ஆண்ட்ராய்டு 11!

புதிய வசதிகளுடன் அறிமுகமாகிறது கூகுளின் ஆண்ட்ராய்டு 11!

புதிய வசதிகளுடன் அறிமுகமாகிறது கூகுளின் ஆண்ட்ராய்டு 11!
Published on

அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டுவந்த கூகுள், தற்போது ஆண்ட்ராய்டு 11-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகின் பிரபலமான ஸ்மார்ட்போன் இயங்குதளமான ஆண்ட்ராய்டை, கூகுள் நிறுவனம் 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அப்போது வெளியான முதல் பதிப்புக்கு ஆண்ட்ராய்டு 1.0 என்று பெயரிடப்பட்டது. அதன்பிறகு அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டுவந்த கூகுள், தற்போது ஆண்ட்ராய்டு 11 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 19ஆம் தேதி, preview எனப்படும் முன்பார்வைக்காக வெளியிடப்பட்ட இந்த இயங்குதளமானது, ஜூன் 2 ஆம் தேதி முதல் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் அனைத்து மாடல் ஸ்மார்ட்போன்களிலும் கிடைக்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 2,3,3A, 4 மற்றும் XL மாடல் ஸ்மார்ட்போன்களில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11இல் பல அதிநவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இதில் 5ஜி தொழில்நுட்ப அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் ஆண்ட்ராய்டு 11 இல் இருப்பதால் தகவல் திருட்டு, அனுமதியில்லாமல் இருப்பிடத் தரவு பரிமாற்றம், கேமரா மற்றும் மைக்ரோஃபோன் பாதுகாப்பின்மை என்பன போன்ற பிரச்னைகளுக்கு வாய்ப்பு குறைவு என்கிறது கூகுள். ஐபோனில் இருப்பது போன்று, ஒருமுறை மட்டுமே நமது இருப்பிடத்தை செயலிகள் அறிந்துகொள்ளும் வசதியான Allow once என்ற வசதி ஆண்ட்ராய்டு 11 இல் உள்ளது. மிகவும் பாதுகாப்பான கைரேகை சென்சார், டார்க் மோடு உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன.

மிகவும் முக்கியமான மற்றொரு அம்சம் என்னவென்றால் bubble- conversations. இதனை வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சாட்டிங் செயலிகளுக்காக பயன்படுத்தலாம். திரையில் bubble போன்று தெரியும் இந்த வசதி மூலம் எளிதாக சாட்டிங் செய்ய முடியும். ஆண்ட்ராய்டு 10 பீட்டா இயங்குதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வராத screen recording வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்மார்ட்போன் திரை செயல்பாடுகளை பதிவு செய்ய முடியும்.

இத்துடன் New Air Gestures என்ற வசதி ஆண்ட்ராய்டு 11இல் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதாவது ஸ்மார்ட்போனை தொடாமல் எளிமையான கை சைகை மூலம் செயலிகளை இயக்கும் வசதி. இந்த வசதி மூலம் பயனர்கள் ஒரு பாடலை ஒலிக்க செய்யலாம் அல்லது நிறுத்தலாம். soli radar chip மூலம் New Air Gestures செயல்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com