\
ஆசஸ் ஃபோனுக்கு 100 ஜிபி இலவச டேட்டா - ஜியோ ஆஃபர்

ஆசஸ் ஃபோனுக்கு 100 ஜிபி இலவச டேட்டா - ஜியோ ஆஃபர்

ஆசஸ் ஃபோனுக்கு 100 ஜிபி இலவச டேட்டா - ஜியோ ஆஃபர்
Published on

பிரபல கைப்பேசி நிறுவனமான ஆசஸ், ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து தனது நிறுவனத்தின் ஃபோன்கள் மீது 100 ஜிபி கூடுதல் டேட்டா சேவையை வழங்கியுள்ளது.

தைவான் கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஆசஸ் தற்போது ரிலையன்ஸின் ஜியோவுடன் இணைந்து குறிப்பிட்ட ஜென்ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. 

இந்த சலுகை ஜென்ஃபோன் செல்ஃபி, ஜென்ஃபோன் மேக்ஸ், ஜென்ஃபோன் Go 4.5 LTE, ஜென்ஃபோன் Go5.0LTE, ஜென்ஃபோன் Go 5.5 LTE, ஜென்ஃபோன் 2, ஜென்ஃபோன் 2 லேசர், ஜென்ஃபோன் 2 லேசர் 5.5, ஜென்ஃபோன் 3S மேக்ஸ், ஜென்ஃபோன்  3 லேசர், ஜென்ஃபோன்  3 மேக்ஸ் 5.2, ஜென்ஃபோன்  3 மேக்ஸ்5.5, ஜென்ஃபோன் ஜும், ஜென்ஃபோன் 3 டீலக்ஸ்,ஜென்ஃபோன் 3 அல்ட்ரா, ஜென்ஃபோன் 3 5.2, மற்றும் ஜென்ஃபோன் 3 5.5 உள்ளிட்ட ஃபோன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 100 ஜிபி வரை இலவச டேட்டாவை வழங்குகிறது.

இந்த சலுகை ஜூன் 16 ஆம் தேதி முதல் ஆசஸ் சாதனங்களை வாங்கிய ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com