இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது Asus "விவோபுக்" 13 ஸ்லேட் லேப்டாப்
தகவல் தொடர்பு மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை தயாரித்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வரும் தைவான் நாட்டு நிறுவனமான Asus ‘விவோபுக் 13 ஸ்லேட்’ என்ற புதிய லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதனை 2-இன்-1 யூஸாக பயன்படுத்தலாம் என பிராண்ட் செய்து வருகிறது அந்நிறுவனம்.
சிறப்பம்சங்கள்!
Detachable லேப்டாப் லைன்-அப்பில் அறிமுகமாகியுள்ள இந்த சாதனம் விண்டோஸ் 11 இயங்குதளத்தில் இயங்குகிறது. 13.3 இன்ச் டால்பி விஷன் டிஸ்பிளே, Asus பென் 2.0 ஸ்டைலஸ் சப்போர்ட், 170-டிகிரி வரை கழட்டி மாட்டும் வகையிலான ஹிஞ்ச், Detachable கீபோர்ட், இன்டல் பென்டியம் சில்வர் N6000 SoC புராசஸர், 50Whr பேட்டரி, ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் வரை இந்த சாதனத்தை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைப்-சி சார்ஜிங் போர்ட், டால்பி ஆட்டம் ஸ்பீக்கர்ஸ் ஆகியவை இதில் உள்ளது. மூன்று மாடல்களில் வெளிவந்துள்ளது இந்த லேப்டாப். இதன் ஆரம்ப மாடலின் விலை 45,990 ரூபாயாகும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த மடிக்கணினி விற்பனைக்கு கிடைக்கிறது. டிஜிட்டல் சாதன பயனர்களின் பயன்பாட்டு தேவையை கருதி இதை வடிவமைத்து, வெளியிட்டுள்ளதாக Asus இந்தியா தெரிவித்துள்ளது.