ஏலியன்கள் இருக்கிறார்களா? பறக்கும் தட்டுகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது நாசா!

ஏலியன்கள் இருக்கிறார்களா? பறக்கும் தட்டுகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது நாசா!
ஏலியன்கள் இருக்கிறார்களா? பறக்கும் தட்டுகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது நாசா!

மிகவும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒன்றான பறக்கும் தட்டுக்கள் குறித்த ஆராய்ச்சியில் நாசா ஈடுபட உள்ளது. பறக்கும் தட்டுக்கள் குறித்த மர்மமான காட்சிகளை ஆய்வு செய்ய ஒரு அறிவியல் குழுவை உருவாக்குகிறது நாசா.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக மர்மமாக நீடிக்கும் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்கள் (UFOs) பற்றிய காட்சிப் பதிவுகள் பற்றிய அறிவியல் ஆய்வைத் தொடங்க உள்ளது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா. அதிக ஆபத்துள்ள, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அறிவியலை ஆராய்வதற்காக ஒரு அறிவியல் குழுவை உருவாக்கும் திட்டத்தை நாசா அறிவித்துள்ளது.

கிடைக்கக்கூடிய தரவை வரிசைப்படுத்தவும், எதிர்காலத் தரவைச் சேகரிப்பதற்கான சிறந்த வழிகளை அடையாளம் காணவும், இந்த சிக்கலைப் பற்றிய அறிவியல் புரிதலை மேம்படுத்த தகவலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும் அந்த குழு ஆய்வு செய்யும் என நாசா தெரிவித்துள்ளது. அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள் எனப்படும் வானத்தில் உள்ள மர்மமான காட்சிகளை விளக்க முயற்சிப்பதில் இது முதல் படியாக நாசா கருதுகிறது.

சைமன்ஸ் அறக்கட்டளையின் தலைவரான வானியற்பியல் விஞ்ஞானி டேவிட் ஸ்பெர்கெல் தலைமையில் குழு அமைக்கப்படும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த ஆய்வுக்கு ஆயிரம் முதல் லட்சக்கணக்கான டாலர்கள் செலவாகும் என நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் கடற்படை விமானிகளால் ஏப்ரல் 28, 2020 அன்று எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில் எடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள் சில பதிவாகி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com