ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ‘ஐபேட்’ வெளியீடு - விலை, சிறப்பம்சங்கள்..!

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ‘ஐபேட்’ வெளியீடு - விலை, சிறப்பம்சங்கள்..!
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ‘ஐபேட்’ வெளியீடு - விலை, சிறப்பம்சங்கள்..!

ஆப்பிள் நிறுவனம் தங்கள் உற்பத்தியான புதிய ஐபேட் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

நாள்தோறும் ஆப்பிள் நிறுவனம் தங்கள் புதிய கண்டுபிடிப்புகளை சர்வதேச சந்தைகளில் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் புதிய ஐபேட் ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளது. ‘ஐபேட் ப்ரோ’ என இந்த மாடலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஐபேட் 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என்ற இரண்டு ரகங்களில் வெளியாகியுள்ளது.

அதன்படி, வைஃபை மாடல் கொண்ட 11 இன்ச் ஐபேடின் விலை ரூ.71,900 எனவும், அதே இன்சில் வைஃபை வசதியுடன் செல்போன் வசதியும் கொண்டிருக்கும் ரகம் ரூ.85,900 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 12.9 இன்ச் ஐபேட் மாடலை பொறுத்தவரை வைஃபை ரகம் ரூ.89,900 எனவும், வைஃபையுடன் செல்போன் வசதிகொண்ட ரகம் ரூ.1,03,900 எனவும் விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த ஐபேடில் 12 மற்றும் 10 எம்பி என இரட்டைக் கேமராக்கள் உள்ளன. அத்துடன் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் டிராக் பேட் மற்றும் ப்ரோ வீடியோ மற்றும் போட்டக்களை சப்போர்ட் செய்யும் அப்ளிகேஷன்களும் உள்ளன. இதனை இயக்குவதற்கு பிரத்யேக மேஜிக் மவுஸ் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன்விலை இந்திய மதிப்பில் ரூ.27,900 முதல் ரூ.31,900 வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com