\
ஆப்பிள் ஐஃபோன் 7-க்கு ரூ.23,000 வரை தள்ளுபடி

ஆப்பிள் ஐஃபோன் 7-க்கு ரூ.23,000 வரை தள்ளுபடி

ஆப்பிள் ஐஃபோன் 7-க்கு ரூ.23,000 வரை தள்ளுபடி
Published on: 

ஆப்பிள் ஐஃபோன் 7, சாம்சங் கேலக்ஸி எஸ்7 மற்றும் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்ஃபோன்கள் ஆகியவை ஆன்லைன் ஸ்டோர்களில் மிகப்பெரிய தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

அலிபாபா டாட் காம், பேடிஎம் ஆகிய ஆன்லைன் ஸ்டோர்கள் ஆப்பிள், சாம்சங், கூகுள் ஃபோன்களை மிகப்பெரிய தள்ளுபடி விலையில் விற்பனை செய்கின்றன. மேலும் குறிப்பிட சதவீதம் பணத்தை ‘கேஷ்பேக்’ முறையில் திரும்பக் கொடுக்கின்றன. ரூ.60,000 மதிப்புள்ள 32 ஜிபி ஆப்பிள் ஐஃபோன் 7, ரூ.45,000க்கு கிடைக்கிறது. செலுத்தும் ரூ.45 ஆயிரத்தில் ரூ.5,850 திரும்ப கேஷ்பேக் முறையில் கிடைக்கிறது. அதேபோல், ரூ.70,000 மதிப்புள்ள 128 ஜிபி ஆப்பிள் ஐஃபோன் 7, ரூ.53,000க்கு கிடைக்கிறது. இதில் ரூ.6,400 திரும்பக் கிடைக்கிறது.

ரூ.72,000 மதிப்புள்ள 32 ஜிபி ஆப்பிள் ஐஃபோன் 7 பிளஸ், ரூ.58,000க்கு கிடைக்கிறது. அதேபோல், ரூ.82,000 மதிப்புள்ள 128 ஜிபி ஆப்பிள் ஐஃபோன் 7 பிளஸ், ரூ.66,000க்கு கிடைக்கிறது. இந்த இரண்டு ஃபோன்களுக்கும் ரூ.7,000 பணம் திரும்பக் கிடைக்கிறது. இதேபோல், சம்சங் கேலக்ஸி எஸ்7 மற்றும் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்ஃபோன்களும் கணிசமான தொகை தள்ளுபடியில் விற்பனைக்கு வந்துள்ளன. ஏற்கனவே, அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இகாமர்ஸ் தளங்கள் தள்ளுபடி அறிவித்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com