விருப்பமான கலர்களில் ஆப்பிள் ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ - இந்தியாவில் தொடங்கியது விற்பனை!

விருப்பமான கலர்களில் ஆப்பிள் ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ - இந்தியாவில் தொடங்கியது விற்பனை!
விருப்பமான கலர்களில் ஆப்பிள் ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ - இந்தியாவில் தொடங்கியது விற்பனை!

ஏற்கெனவே அறிவித்திருந்தபடி ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது ஐபோன் 12.  

2020ஆம் ஆண்டு வெளிவரும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்த நான்கு மாடல்களில் இதுவும் ஒன்று. ஐபோன்12 மினி, ஐபோன்12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் என்ற வரிசையில் ஐபோன் 12ம் இடம்பெற்றிருந்தது. இந்த மாதத் தொடக்கத்திலேயே ஆன்லைனில் ப்ரீ புக்கிங் செய்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்திருந்தது. இந்த போனை பல மாடல்கள் மற்றும் வெவ்வேறு ஸ்டோரேஜ் வசதிகளில் ஆர்டர் செய்துகொள்ளலாம்.

64ஜிபி, 128ஜிபி மற்றும் 256 ஜிபிக்களில், நீலம், பச்சை, கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை என எந்த நிறத்தில் வேண்டுமானாலும் பதிவுசெய்துகொள்ளலாம். ஸ்டோரேஜ் வசதியைப் பொறுத்து விலையிலும் மாற்றமிருக்கும். 64 ஜிபி ரூ.79,9000க்கும், 128 ஜிபி ரூ.84,900க்கும், 256 ஜிபி ரூ.94,900க்கும் விற்பனைக்கு உள்ளது. நமது முகவரியைப் பொறுத்து நவம்பர் 4ஆம் தேதிமுதல் ஆர்டர் செய்திருப்பவர்களுக்கு ஐபோன்12 வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய ஐபோனை மாற்றி இந்த போனை வாங்குபவர்களுக்கு ரூ.22 ஆயிரம் வரை குறையும் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. பழைய ஐபோன் அல்லது வேறு எந்த ஸ்மார்போனையும் கொடுத்து மாற்றினால் வர்த்தக விலைக்கு ஏற்ப கடைசியாக வரும் பில்லில் சலுகை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பழைய போனை மாற்றுபவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும் எனவும், நேரில் அந்த பதில்களுடன் ஒத்துபோக வேண்டும் எனவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாங்கிய நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை வாரண்டி கொடுக்கக்கூடிய ஆப்பிள்கேர்+ கவரேஜ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. போன் பழுது, பேட்டரி பிரச்னை மற்றும் ஆப்பிள் நிபுணர்களிடம் முன்னுரிமை ஆகிய வசதிகள் இதில் அடங்கும். ஐபோன் 12க்கான இந்த வசதிக்கு ரூ.16,900 செலுத்தவேண்டி வரும்.

பணம் செலுத்த இஎம்ஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, கார்டு ஆன் டெலிவரி மற்றும் ரூப்பே போன்ற பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தமுறை கேஷ் ஆன் டெலிவரி கொடுக்கப்படவில்லை. ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோரிலிருந்து அனுப்பப்படும் இந்த போன்கள் இந்தியா முழுவதும் கிடைக்கும். டெலிவரி கிடைத்ததை உறுதிப்படுத்த ஆர்டர்களுக்கு கையெழுத்திடத் தேவையில்லை. ஐபோன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க ஐபோன் நிபுணர்களுடன் உரையாடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா முழுவதும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் உரையாடிக் கொள்ளலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com