ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE ஸ்மார்ட்போன் அறிமுகம் - ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE ஸ்மார்ட்போன் அறிமுகம் - ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE ஸ்மார்ட்போன் அறிமுகம் - ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?
Published on

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இன்றியமையாத சாதனமாக அமைந்துள்ளது ஸ்மார்போன். அதன் இயக்கமின்றி உலகின் இயக்கம் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இத்தகைய சூழலில் மலிவு விலையில் ஐபோன் SE ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம். ஐபோன் SE கடந்த 2016-இல் அறிமுகம் செய்யப்பட்டது. 2020-இல் ஐபோன் SE 2 மாடல் அறிமுகமாகி இருந்தது. தற்போது ஐபோன் SE 2022 மாடல் வெளியாக உள்ளது.

சிறப்பம்சங்கள்!

இந்த போனில் A15 பயோனிக் புராசஸர் இடம் பெற்றுள்ளது. இந்த புராசஸர் தான் ஐபோன் 13 சீரிஸ் போன்களிலும் இடம் பெற்றுள்ளது. 4.7 இன்ச் டிஸ்பிளே, 12 மெகாபிக்சல் ரியர் கேமரா, 7 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா, 64ஜிபி, 128ஜிபி மற்றும் 256 ஜிபி என மூன்று வேரியண்டுகள், SE கேட்டகிரியில் முதல் 5ஜி போன் இது. மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. 

இந்த போனின் ஆரம்ப விலை 43,900 ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு வரும் 11-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வரும் 18-ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com