முதல் மடிக்கும் ஆப்பிள் ஐபோன் அறிமுகம்.. கவரும் அம்சங்களுடன் ’iPhone Duo’.. சிறப்புகள், விலை என்ன?
ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் முதல் மடிக்கும் ஐபோன் ‘ஆப்பிள் டியோ’ அறிமுகம் செய்யப்பட்டது. 5.4-இஞ்ச் அவுடர், 7.6-இஞ்ச் அன்போல்ட் டிஸ்பிளே, A20 ப்ரோ சிப்செட், iOS 27, 2nm புராசஸ், ஆப்பிள் பென்சில் சப்போர்ட், டச் ஐடி, 48MP டூயல் கேமரா ஆகிய அம்சங்களுடன் வரும் இந்த மாடல், 256GB ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை வேரியண்ட் ரூ.2,99,900க்கு அக்டோபர் இறுதியில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
கலிபோர்னியாவின் ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் மாடலான ஐபோன் டியோ ( iPhone Duo) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மடிக்கும் ஸ்மார்ட்ஃபோன்களின் சந்தையில் ஆப்பிளும் தன்னுடைய காலடி தடத்தை பதித்துள்ளது. இதோ இப்போ வந்துடும், அடுத்த அப்டேட்டே ஐபோன் Foldable தான் என ஹைப் ஏற்றிய பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில், புதிய சிஇஒ ஜான் டர்னஸ் தலைமையில் முதல் மடிக்கும் ஐபோனை பல்வேறு பியூச்சர்களுடன் களமிறக்கியுள்ளது ஆப்பிள்..
நேற்று இரவு நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் "சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்" என்ற பிரமாண்ட நிகழ்வில் முதல் மடிக்கும் ஐபோனான ஆப்பிள் டியோ, ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட முக்கிய அப்டேட்டட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்த விவரங்களையும், சிறப்பம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்..
ஆப்பிள் டியோ
பொதுவாக செப்டம்பர் மாதம் ஆப்பிள் தங்களுடைய புதிய மாடல்களை அறிமுகம் செய்வது வழக்கம் தான் என்றாலும், இந்த ஆண்டு நடைபெறும் ஆப்பிள் வெளியீட்டு நிகழ்வை ஸ்பெசலாகவும், எல்லோரையும் பார்க்க தூண்டும் ஒன்றாகவும் மாற்றியதற்கு முக்கிய காரணம் ‘மடிக்கக்கூடிய ஐபோன்’ அறிமுகமாகப்போகிறது என்பது தான். அதன்படி அனைத்து ஹைப்களையும் பூர்த்தி செய்யும் வகையில் A20 ப்ரோ சிப்செட், டைனமிக்லி அடாப்டிவ் iOS 27 மென்பொருள் அமைப்பு மற்றும் 2nm புராசஸ் உடன் ‘ஆப்பிள் டியோ’ வெளியாகியுள்ளது. இதன் வெளிப்புற டிஸ்பிளே 5.4-inch ஆகவும், Unfold செய்து நீட்டித்தால் 7.6-inch டிஸ்பிளே உடனும் ஒரு புத்தக வடிவ மடிப்பு அமைப்பை கொண்டுள்ளது.
Outer, Unfold என ஒரே தொகுப்பில் இரண்டு திரைகளைப் பயன்படுத்தும் வசதியை உங்களுக்கு வழங்கும் இந்த ஆப்பிள் டியோவில், ஆப்பிள் பென்சில் சப்போர்ட் மற்றும் Power Button-ல் டச் ஐடி வசதிகளும் இடம்பெற்றுள்ளன. கேமராவை பொறுத்தவரையில் ஐபோன் டியோவில் 48MP ஃப்யூஷன் மெய்ன் கேமராவும், 48MP அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளன. ஸ்டார் ஒயிட் மற்றும் நைட் ஸ்கை ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த மடிக்கும் ஐபோனின் ஆரம்ப விலையே 256GB ஸ்டோரேஜ் உடன் 2,99,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ்
இதனுடன் ஆப்பிள் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் புதிய பியூச்சர்களுடன் இறங்கியுள்ளன. இவை கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 17 ப்ரோ சீரிஸை விட பல வன்பொருள் மேம்பாடுகளைக் கொண்டுள்ளன. இந்த புதிய ப்ரோ மாடல்கள், ஆப்பிளின் நவீன A20 ப்ரோ சிப்செட் மூலம் இயக்கப்படுவதுடன், புதிய C2 மோடத்தைக் கொண்டுள்ளன. ஐபோன் 18 ப்ரோ ஒரே சார்ஜில் 24 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளையும், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் 30 மணிநேரம் வரை நீடிக்கும் பேட்டரியையும் வழங்குகிறது. இதில் 48MP ஃபியூசன் மெய்ன் கேமரா சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இது ஐபோன் வரிசையிலேயே முதன்முறையாக, physical variable aperture அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இது ஆழமான புகைப்படங்களையும், குறைந்த ஒளியில் கிளியரான படங்களையும் பிடிக்க உதவுகின்றன. ஆப்பிள் ப்ரோ 6.3 இஞ்ச் டிஸ்பிளே மற்றும் ஆப்பிள் ப்ரோ 6.9 இஞ்ச் டிஸ்பிளே உடன் கிடைக்கின்றன.
இந்தியாவில், ஐபோன் 18 ப்ரோவின் விலை ரூ. 1,64,900-லிருந்தும், ஐபோன் 18 ப்ரோ மேக்ஸின் விலை ரூ. 1,79,900-லிருந்தும் தொடங்குகிறது. இந்த இரண்டு மாடல்களும் 256ஜிபி, 512ஜிபி, 1டிபி மற்றும் 2டிபி ஸ்டோரேஜ் விருப்பங்களில் வழங்கப்படுகின்றன. இவை கருப்பு, வெள்ளி, கிளேசியர் மற்றும் புதிய பர்கண்டி முதலிய வண்ணங்களில் கிடைக்கின்றன. இந்த ஐபோன்கள் செப்டம்பர் 12 முதல் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டு, செப்டம்பர் 18 அன்று விற்பனை தொடங்கவிருக்கின்றன.

