‘ரியாலிட்டி OS’: புதிய இயங்குதளத்தை உருவாக்கும் முயற்சியில் ஆப்பிள்?

‘ரியாலிட்டி OS’: புதிய இயங்குதளத்தை உருவாக்கும் முயற்சியில் ஆப்பிள்?

‘ரியாலிட்டி OS’: புதிய இயங்குதளத்தை உருவாக்கும் முயற்சியில் ஆப்பிள்?
Published on

2022 பிற்பாதியில் அல்லது 2023 வாக்கில் ஆப்பிள் நிறுவனம் ஆக்மென்டட் ரியாலிட்டி/விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டை லான்ச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த சாதனத்தை இயக்குவதற்காக ஆப்பிள் நிறுவனம் ‘Reality OS’ என்ற பிரத்யேக இயங்குதளம் ஒன்றை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக டெவலப்பர்கள் தெரிவித்துள்ளனர். 

iOS 13 பில்ட் ப்ரீ ரிலீஸில் இந்த rOS ஸ்பாட் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2017 வாக்கிலும் இந்த rOS குறித்து ரெஃபரென்ஸ் வெளியாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆப்ஸ்டோர் இன்ஸ்டால் லாகில் இது குறித்த தகவல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் தயாரிப்புகள் குறித்து செய்தி வெளியிட்டு வரும் 9to5mac இதனை தெரிவித்துள்ளது. 

இருந்தாலும் இது குறித்து தொழில்நுட்பம் சார்ந்து இயங்கி வரும் நபர்கள் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்துள்ளனர். சிலர் இதனை குறியீட்டு சொல்லாக கூட இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com