தூய தங்கத்தால் ஆன ஆப்பிள் ஹெட்போன் - விலை எத்தனை இலட்சங்கள் தெரியுமா?

தூய தங்கத்தால் ஆன ஆப்பிள் ஹெட்போன் - விலை எத்தனை இலட்சங்கள் தெரியுமா?

தூய தங்கத்தால் ஆன ஆப்பிள் ஹெட்போன் - விலை எத்தனை இலட்சங்கள் தெரியுமா?
Published on

ஆப்பிள் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்ஃபோன்கள், கோல்டு வொயிட் மற்றும்  கோல்டு பிளாக் வகைகளில் கிடைக்கின்றன. இந்த இரண்டு வகைகளுக்கும் $ 108,000 டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது சுமார் 79,25,245 ரூபாய் ஆகும்.

ஆப்பிள் இந்த மாத தொடக்கத்தில் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்ஃபோன்களை 549 டாலர், அதாவது 59,900 ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதைவிட அதிக விலைக்கு நீங்கள் வாங்க விரும்பினால், இன்னொரு ஹெட்போன் விலை 108,000 டாலர், அதாவது 79,25,245 ரூபாய், இது தூய தங்கத்தால் செய்யப்பட்டது.

பிரபலமான கேட்ஜெட்களின் ஆடம்பர வகைகளை தயாரிக்கும் ரஷ்ய நிறுவனமான கேவியர் தனது 2021 வரிசையை அறிவித்துள்ளது. இந்த வரிசையில் நைக் ஏர்ஜோர்டான் ஷூக்கள், சோனி பிஎஸ் 5 மற்றும் தூய தங்கத்தால் ஆன ஆப்பிள் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்ஃபோன் வகைகளும் உள்ளன. இந்த இரண்டு வகைகளில் கோல்ட் ஒயிட் வேரியண்டிற்கு 750 தங்கம் மற்றும் வெள்ளை முதலை தோல் மற்றும் கோல்ட் பிளாக் வேரியண்டிற்கான கருப்பு முதலை தோல் ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ளன என்று கேவியர் கூறுகிறது.

ஆனால், இந்த ஹெட்போன்களை எல்லோரும் வாங்க முடியாது. விலைக் குறி ஒருபுறம் இருக்க, நிறுவனம் இந்த ஹெட்ஃபோன்களில் ஒன்றை மட்டுமே உருவாக்கியுள்ளது. எனவே, இந்த ஆப்பிள் ஹெட்ஃபோனை வாங்க விரும்பினால், கேவியர் இணையதளத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com