பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு: யூடியூபின் புது டெக்னிக்

பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு: யூடியூபின் புது டெக்னிக்

பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு: யூடியூபின் புது டெக்னிக்
Published on

உலகின் பல நாட்டு அரசுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், யூ டியூப் தொழில் நுட்பரீதியில் பயங்கரவாதத்தை முனை மழுங்கச் செய்யும் வேலையில் இறங்கியுள்ளது.  

ஐஎஸ் அமைப்பு தொடர்பாக வீடியோக்களை பயனாளர்கள் தேடும்பொழுது, அந்த அமைப்புக்கு எதிரான வீடியோக்களைக் காண்பிக்கும் தொழில்நுட்பத்தை யூடியூப் நிறுவனம் செயல்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட கீ வேர்டுகள் மூலம் அதனைக் கண்டறிந்து மாற்று வீடியோக்களை வழங்கும் வண்ணம் ரீடைரக்ட் (Re-Direct) எனும் தொழில்நுட்பம் மூலம் இது செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த புதிய தொழில்நுட்பம் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான கொள்கைகளைப் பாதிக்காது என்றும் யூடியூப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. மேலும், யூடியூபைப் பயன்படுத்தி ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள்சேர்க்கும் பணிகளில் ஈடுபடுவதும் இதன்மூலம் தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமான யூடியூப், உலகின் முன்னணி விடியோ ஸ்ட்ரீமிங் இணையதளமாக இருந்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், யூடியூப் இந்தப் புதிய தொழில் நுட்பத்தை அமல்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்தைப் பரப்புவதிலும், பயங்கரவாதிகள் தங்களுக்குள் தகவல் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் சமூகவலைதளங்கள் மிகப்பெரிய அளவில் உதவுகின்றன என குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், பயங்கரவாதத்தை வேரறுக்கும் நடவடிக்கைகளில் உலக நாடுகளுடன் கூகுள் நிறுவனம் கைகோர்த்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com