க்ராஷ் ஆகும் ஆண்ட்ராய்ட் செயலிகள்: உலகம் முழுவதும் சிக்கலில் பயனர்கள்
இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்ட் போன் பயனர்களில் சிலரது போனில் உள்ள அப்ளிகேஷன்கள் க்ராஷ் (Crash) ஆகி வருவதால் அதனை பயணபடுத்த முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. சிக்கலை சீர் செய்யும் பணியில் கூகுள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. காரணமே இல்லாமல் ஜிமெயில் உட்பட சில அப்ளிகேஷன்கள் க்ராஷ் ஆகியுள்ளதாக தெரிகிறது. அது பயனர்களுக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வெப் வியூ அப்ளிகேஷன் என்ற அப்டேட்தான் இதற்கு காரணம் என தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். கூகுள் நிறுவனம் தற்போது அந்த சிக்கலை சரி செய்ய முயன்று வருவதாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த சிக்கலை எதிர்கொண்டு வரும் பயனர்கள் அடுத்த அப்டேட் வரும் வரை காதிருக்க வேண்டி உள்ளது. அதுவரை காதிருக்க முடியாதவர்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் வெப் வியூவை அன் இன்ஸ்டால் செய்வது அல்லது கூகுள் குரோமை டிசேபிள் செய்வது தான் இப்போதைக்கு உள்ள வழி என தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.