அமேசான் நிறுவனத்தில் பணிநீக்கம்
அமேசான் நிறுவனத்தில் பணிநீக்கம்web

30,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் அமேசான்.. ஊழியர்களுக்கு அதிர்ச்சி!

முன்னணி நிறுவனமான அமேசான் தங்களுடைய ஒட்டுமொத்த ஊழியர்களில் 10% பேரை வேலையிலிருந்து வெளியேற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..
Published on
Summary

அமேசான் நிறுவனம் தங்களது ஊழியர்களில் 10% பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால் 30,000 பேர் வேலை இழக்க உள்ளனர். ரோபா மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக, செலவு குறைப்பை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிப்பு அனுப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பொது முடக்கத்திற்குப் பின் கடந்த 2020-ம் ஆண்டிலிருந்தே உலகம் முழுவதும் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் வேலையில் ஈடுபட்டுவருகின்றன.

செலவு குறைப்பு, ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீடு போன்ற பல்வேறு காரணங்களை காட்டி டிசிஎஸ், காக்னிசண்ட், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்கள் ஊழியர்களை தொடர்ந்து வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதில் முக்கிய காரணமாக ரோபா மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி முன்னணியில் இருந்துவருகிறது..

அமேசான்
அமேசான்எக்ஸ் தளம்

இந்த நிலையில் இணைய வர்த்தக உலகில் முன்னணி நிறுவனமாக இருக்கும் அமேசானும், கடந்த 2020 முதல் சுமார் 27,000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்திருந்தது.

இந்தசூழலில் தற்போது மீண்டும் ஆட்குறைப்புப் பணியில் ஈடுபட உள்ள அமோசான், கடந்த எண்ணிக்கையை விட அதிக பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

உலகின் முன்னணி தொழில்நிறுவனமான அமேசான், உலகம் முழுவதும் தங்களுடைய கிளைகளை நிறுவியுள்ளது. மிகப்பெரிய நிறுவனமான அமேசானில் சுமார் 3 லட்சத்து 50ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றிவரும் நிலையில், அதில் 10% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டிருப்பதாக செய்திவெளியாகியுள்ளது..

30,000 பேர் பணி நீக்கம்..!
30,000 பேர் பணி நீக்கம்..!

ஊழியர்களிடம் பேசி பணிநீக்கம் செய்வதற்கான வேலையில் ஈடுபட மேனேஜர்களுக்கு நேற்று அவசரமாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், பணிநீக்கத்திற்கான மின்னஞ்சல்கள் இன்றிலிருந்தே ஊழியர்களுக்கு அனுப்பப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.. இந்த அதிர்ச்சிக்குரிய செய்தியால் அமேசான் ஊழியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com