நுபியா எம்2 ஸ்மார்ட்ஃபோன் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 22,999 ரூபாயில் விற்பனைக்கு வருகிறது.
நுபியா நிறுவனத்தின் நுபியா எம்2 என்ற ஸ்மார்ட்போன் மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. தற்போது இந்த நுபியா எம்2 அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக ரூ .22,999 விலைக்கு கிடைக்கிறது. இதற்கான விற்பனை ஜூலை 10 ம் தேதி மாலை 6 மணி முதல் ஜூலை 10 நள்ளிரவு வரை நடக்கிறது. நுபியா எம்2 ஸ்போர்ட்ஸ் டுயல் ரியர் கேமரா, 5.5 இன்ச் ஹெச்.டி.அமோல்ட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு அம்சம், ஆக்டோ கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் MSM8953, 2.0 GHz பிராசஸர் கிளாக், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இண்டர்நல் ஸ்டோரேஜ், மைக்ரோ SD வழியாக 200 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய நினைவகம், 16மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 13மெகாபிக்சல், 3630 mAh பேட்டரி திறன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
மேலும், இந்த ஃபோனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1100 ரூபாய் வரை கேஷ்பேக் ஆஃபர் உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.