spam calls, airtel
spam calls, airtelpt web

SPAM அழைப்புகளால் தொந்தரவா? ஏர்டெல் தரும் தீர்வு..!

SPAM அழைப்புகளை தவிர்க்க AI தொழில்நுட்பத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Published on

நவீன தொழில்நுட்பங்கள் வளரும் அதே வேகத்தில் சைபர் குற்றங்களும் அதிகரிக்கத்தான் செய்கின்றன. செல்போன்களை வைத்திருப்பதை பெருமையாக நினைத்த காலம்போய், SPAM அழைப்புகளால் ஒருபுறம் தலைவலி.. மறுபுறம் அச்சம் என வாடிக்கையாளர்கள் கலக்கம் கொள்ளும் நிலைதான் தற்போது உள்ளது.

 பிரஜேஷ்
பிரஜேஷ்

இதற்குக்காரணம், தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து வரும் அழைப்புகளால் பலரும் பணத்தை இழந்திருப்பதுதான். SPAM அழைப்புகளை கண்டறிந்து அதை தவிர்க்க நெட்வொர்க் இண்டலிஜென்ஸ் உடன் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ்- ஐ இணைத்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி செயல்படுத்தி வருவதாக கூறுகிறார் ஏர்டெல் நிறுவனத்தின் தமிழகத்தின் வர்த்தகப்பிரிவு தலைவர் பிரஜேஷ் தெரிவித்துள்ளார்.

60 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு நாளொன்றுக்கு சராசரியாக 3 SPAM அழைப்புகள் வருகிறது என்றும் 87 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு மாதம் ஒருமுறை SPAM அழைப்புகள் வருவதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. வாடிக்கையாளர்களுக்கு Anti ஸ்பேம் தொழில்நுட்பத்தை இலவசமாக வழங்கி வருவதாக ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல, தொடர்ந்து ஒரே இடத்தில் இருந்து வரக்கூடிய அழைப்புகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நெட்வொர்க் பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் எனவும் ஏர்டெல் நிறுவனத்தின் தமிழக வர்த்தகப்பிரிவு தலைவர் பிரஜேஷ் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com