\
“2022-இல் ஃபிளையிங் டேக்ஸியை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்” - ஏர் ஏசியா சி.இ.ஓ

“2022-இல் ஃபிளையிங் டேக்ஸியை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்” - ஏர் ஏசியா சி.இ.ஓ

“2022-இல் ஃபிளையிங் டேக்ஸியை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்” - ஏர் ஏசியா சி.இ.ஓ
Published on: 

வரும் 2022-இல் ஃபிளையிங் டேக்ஸியை அறிமுகம் செய்ய உள்ளதாக ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். தற்போது அது தொடர்பான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

நான்கு பேர் வரை பயணிக்கும் Quadcopter ரக ஹெலிகாப்டரை இந்த ஃபிளையிங் டேக்ஸி சேவையில் அறிமுகம் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

“இந்த ஃபிளையிங் டேக்ஸி சேவைக்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அதிகபட்சமாக இதை செயல்முறைபடுத்த ஒன்றரை வருடங்களாகும் என எதிர்பார்க்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com