பல மொழிகளில் செய்தி வாசித்து அசத்திய AI செய்தி வாசிப்பாளர் ‘லிசா’!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர், பல மொழிகளில் பேசி செய்தி வாசித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி ஒளிபரப்பில் அடுத்தகட்ட வளர்ச்சியாக ஒடிஷா மாநிலத்தில் தனியார் சேனல் ஒன்று செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர் மூலம் செய்திகளை ஒளிபரப்பியது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அந்த செய்தி வாசிப்பாளர், ஆங்கிலம் மற்றும் ஒடியா என இரு மொழிகளிலும் செய்திகளை படித்தார். அந்த செய்தி வாசிப்பாளருக்கு லிசா என பெயரிட்டுள்ளதாகவும் அத்தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிசாவால் பல மொழிகளிலும் செய்திகளை படிக்க முடியும் என்றும் ஒடியா மொழியை இன்னும் தெளிவாக வாசிக்க கற்றுக்கொடுக்க தொழில்நுட்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களிலும் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் லிசாவை பின் தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com