கனவை திரைக்கு மாற்றும் AI முயற்சி
கனவை திரைக்கு மாற்றும் AI முயற்சிweb

’கனவுல டூயட் பாடினா கூட மாட்டீப்பிங்க..’ கனவை திரைக்கு கொண்டுவரும் முயற்சி! AI மாயாஜாலம்!

தூங்கும்போது வருவது கனவு அல்ல நம்மை தூங்க விடாமல் இருப்பதுதான் கனவு என அப்துல் கலாம் கூறினார். அது போல நாம் காணும் கனவை திரையில் மற்றவர்கள் காண முடிந்தால் எப்படி இருக்கும்....ஒரு கனவு காண்பதுபோல் உள்ளதா !!!! ஆம் இது நிஜம்தான்.
Published on

- காமேஷ் குமார்

பொதுவாக நம் கனவில் பல விஷயங்கள் நம் வாழ்க்கையில் பார்த்த அனுபவித்த சம்பவங்கள்தான் வரும். எடுத்துக்காட்டாக ஒரு சூப்பர் ஹீரோ படத்தின் பாதிப்பு, நாம் உறங்கும் போது நாமே அந்த சூப்பர் ஹீரோவாக கனவில் இருப்பது போல் தெரியும். அதை நாம் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்? ஆனால் அதை திரையில் காணமுடியும் என்றால் எப்படி இருக்கும்.

அந்த தொழில்நுட்பத்தை பற்றிதான் நாம் காணவிருக்கிறோம். இப்போது இருக்கும் AI தொழில்நுட்ப உலகத்தில் அனைத்தும் சாத்தியமே..

நம் கனவை திரையில் பார்க்க முடியும்.. எப்படி சாத்தியம்?

கனவை திரையில் காணும் தொழில்நுட்பங்கள் என்பது ஒரு மிகத் திறமையான மற்றும் விரிவான துறையாக விளங்குகின்றது. இது முக்கியமாக வழக்கமான கனவுகளை நாம் நேரடியாக திரையில் காண இயலுமா என்ற ஆராய்ச்சியை நமக்கு விளக்குகின்றது. இதை Dream Visualization Technology அல்லது Dream Recording and Display Technology என ஆங்கிலத்தில் அழைக்கலாம்.

இது தற்போது முழுமையாக செயல்பாட்டில் இல்லாத நிலையில் தொழில்நுட்ப உலகில் இது ஒரு பரபரப்பான துறையாகும். இந்த ஆராய்ச்சியில் முக்கிய தொழில்நுட்பங்களை விரிவாக பார்க்கலாம்..

தற்போது பொதுமக்கள் பயன்படுத்த முழுமையான கனவுத் திரை கருவி இல்லை. ஆனால், உங்கள் கனவுகளைப் பதிவு செய்ய ஆராய்ச்சிக்காக சில ஹெட்செட்கள் (EEG ஹெட்பாண்டுகள்) பயன்படுத்தப்படுகின்றன. இதை உறங்கும் போது அணிந்து கொண்டு உறங்கும் போது நம் மூளையில் ஏற்படும் அதிர்வுகளை பதிவு செய்கின்றன. இது FMRI (Functional Magnetic Resonance Imaging) செயல்பாட்டு காந்த அதிர்வு வரைவு" அல்லது "செயல்பாட்டு எம்.ஆர்.ஐ" என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக, இது மூளையின் செயல்பாட்டை அளவிடப் பயன்படும் ஒரு இமேஜிங் நுட்பமாகும். இரத்த ஓட்டத்தின் அடிப்படையில் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் நிகழும் மாற்றங்களை இது கண்டறிகிறது.

கனவு காணும் போது மூளையின் எந்த பகுதிகள் செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள இது பயன்படுத்தப்படுகிறது.

கனவு எப்படி திரையில் உருவாக்கப்படுகிறது?

EEG (Electroencephalography): மூளையின் மின்துடிப்புகளை பதிவு செய்து, நபர் கனவு காண்பது எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிகின்றது.

கனவு காணும் போது ஏற்படும் மூளை அலைவெளிகளை தொகுத்து, கணினி மூலம் உருவாக்கப்படும் படிமங்களுடன் ஒப்பிடப்படுகிறது. இதற்கு AI மற்றும் Machine Learning போன்ற தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் தானாக உருவாகும் காட்சிகளை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு (AI dream decoding) கண்டுபிடிக்கப்பட்ட மூளை அலை தரவுகளை கொண்டு கணினி காட்சியாக மாற்றுகிறது. இது கனவின் படங்களை மறு உருவாக்கமாக மாற்ற முயற்சி செய்கிறது.

ai மாதிரிப்படம்
ai மாதிரிப்படம்pt web

கனவின் போது நினைவு படங்கள் அல்லது காட்சிகள் தோன்றும். இதை வைத்து காணக்கூடிய காட்சி தொகுப்பாக உருவாக்கப்படுகிறது. இது ட்ரீம் ஹேக்கிங் என்ற முறையின் மூலம் முடிகிறது.

மேலும் கனவு கட்டுப்பாடு தொழில்நுட்பங்கள் மூலம் கனவை புரிந்து கொள்ள முடியும்.. இவ்வாறாக பல முறைகள் மற்றும் AI முறையையும் பயன்படுத்தி நாம் கண்ட கனவை 90 சதவீதம் வரை சேகரித்து திரையில் காணும் வாய்ப்பை தொழில்நுட்பம் சாத்தியப்படுத்த இருக்கின்றது.

ஜப்பான், அமெரிக்கா, மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் இந்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 2013ல், ஜப்பானில் fMRI மூலம் எளிய கனவுக் காட்சிகளை திரும்ப உருவாக்கும் முயற்சி வெற்றிகரமாக முடித்துள்ளது.

Ai
AiPt web

கனவை திரையில் காணும் தொழில்நுட்பம் என்பது இன்னும் முழுமையாக வளரவில்லை. ஆனால், எதிர்காலத்தில் நம்முடைய கனவுகளை "பதிவு" செய்து "திரையில் காண்பது" ஒரு யதார்த்தமாக மாறக்கூடும். அப்படி மாறினால் நாளை நீங்கள் "பூஜா ஹெக்டே கூட மோனிகா பாட்டுக்கு டூயட் ஆடுவது போல் கனவு வந்தால் திரையில் பார்த்து ரசிக்கலாம்"..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com