ஆப்பிள் நிறுவனம் செய்தபோது கேலி செய்துவிட்டு அதே செயலை செய்யும் கூகுள்! என்ன அது?

ஆப்பிள் நிறுவனம் செய்தபோது கேலி செய்துவிட்டு அதே செயலை செய்யும் கூகுள்! என்ன அது?
ஆப்பிள் நிறுவனம் செய்தபோது கேலி செய்துவிட்டு அதே செயலை செய்யும் கூகுள்! என்ன அது?

ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் தன் அடுத்த பிக்சல் 6ஏ மொபைலில் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கை நீக்கியுள்ளது.

கூகுள் நிறுவனம் தன் அடுத்த பிக்சல் 6ஏ மொபைலில் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கை நீக்கியுள்ளது. சாம்சங், கூகுள், ஒன்பிளஸ் போன்ற பல ஸ்மார்ட்போன் பிராண்டுகள் ஐபோன்களில் இருந்து ஹெட்ஃபோன் ஜாக்கை அகற்றியதற்காக ஆப்பிள் நிறுவனத்தை கேலி செய்தன. இருப்பினும், பட்ஜெட் மொபைல் பிரிவுகளில் உள்ள சில பிராண்டுகள், ஐபோன்களில் இருந்து பல வடிவமைப்பு கூறுகளை கடன் வாங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக ஹெட்ஃபோன் ஜாக்கை நீக்கும் முடிவையும் சில நிறுவனங்கள் பின்பற்ற துவங்கிவிட்டன.

ஹெட்ஃபோன் ஜாக்கை கைவிடும் முடிவு முதலில் ஆப்பிள் நிறுவனத்தால் ஐபோன் எக்ஸ் மொபைலில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டில், கூகுள் பிக்சல் 5ஏவை அறிவித்தபோது, ஹெட்ஃபோன் ஜாக் உண்டு என்று கூறியது. ஆனால் வயர்லெஸ் அணுகுமுறைக்கு ஆதரவாக கூகுள் நிறுவனமானது தனது முடிவை மாற்றிக்கொண்டது. ஃபிளாக்ஷிப் பிக்சல் ஃபோன்களில் ஏற்கனவே இந்த அம்சம் இல்லை. இப்போது மலிவு விலை பிக்சல் ஏ சீரிஸிலும் இதுவே செய்யப்பட்டுள்ளது. பிக்சல் 6a இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூகிள் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் பிக்சல் 6ஏ விலை சுமார் ரூ.40,000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்காவில் $449 தொடக்க விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com