சூரியனின் மேற்பரப்பிலிருந்து வெளியேறும் வெப்பகதிர்வீச்சை வீடியோ எடுத்து அனுப்பிய ஆதித்யா L1!

சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிவதற்காக ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை, பிஎஸ்எல்வி - சி-57 என்ற ராக்கெட் மூலம் கடந்தாண்டு (2023) செப்டம்பர் 2-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
நாசாவின் பார்க்கர் - இஸ்ரோவின் ஆதித்யா எல்1
நாசாவின் பார்க்கர் - இஸ்ரோவின் ஆதித்யா எல்1Twitter

இஸ்ரோ, தனது ஆய்வின் அடுத்தகட்டமாக சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிவதற்காக ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை, பிஎஸ்எல்வி - சி-57 என்ற ராக்கெட் மூலம் கடந்தாண்டு (2023) செப்டம்பர் 2-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஒருசில மாத பயணங்களின் முடிவில் ஆதித்யா விண்கலம் விஞ்ஞானிகள் குறிப்பிட்ட இலக்கை எட்டியது. இதைத்தொடர்ந்து சூரியனில் செயல்பாடுகளையும் வானிலையில் ஏற்படும் தாக்கத்தையும் ஆதித்யா எல்-1 விண்கலம் ஆய்வு செய்தும், புகைப்படம் எடுத்தும் அதனை பூமிக்கு அனுப்பி வைத்தது.

இத்தகைய ஆய்வினைத் தொடர்ந்து, விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT) வழியாக சூரியனின் மேற்பரப்பை பல்வேறு நிலைகளில் படம்பிடித்து அனுப்பியது.

இதைத்தொடர்ந்து தற்பொழுது ஒரு மைல்கல்லாக ஆதித்யா விண்கலத்தில் உள்ள SUIT டெலஸ்கோப் உதவியோடு சூரியனின் மேற்பரப்பில் வெளியேறும் வெப்ப கதிர்வீச்சு குறித்த வீடியோ ஒன்றை டிசம்பர் 31ம் தேதி படம் பிடித்து அனுப்பியுள்ளது.

அதை இஸ்ரோ நேற்று வெளியிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com