சூரிய வெடிப்பு - ஆதித்யா L1 எடுத்த புகைப்படம்

சூரிய வெடிப்பு தொடர்பாக ஆதித்யா எல் ஒன் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
ஆதித்யா L1
ஆதித்யா L1 புதிய தலைமுறை

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, ஆதித்யா எல் என் என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவியது. புவியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் எல் ஒன் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்ட ஆதித்யா எல் ஒன், சூரியனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

இது தொடர்பான தரவுகளையும் அவ்வப்போது இஸ்ரோவுக்கு அந்த விண்கலம் அனுப்பி வருகிறது. அதன்படி, கடந்த 11 ஆம் நாள் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை பதிவு செய்த ஆதித்யா எல் ஒன், இஸ்ரோவுக்கு அதன் தரவுகளை அனுப்பி வைத்தது. இந்தத் தரவுகளில் உள்ள புகைப்படங்களை இஸ்ரோ தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஆதித்யா L1
சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை! எங்கே?

சூரிய வெடிப்பு என்பது சூரியனில் நடைபெறும் வேதியியல் மாற்றம் காரணமாக ஒரு பகுதியில் குமிழி போன்று உருவாகி வெடிக்கும் நிகழ்வு. இது தொடர்பான ஆதித்யா விண்கலம் கொடுத்த தரவுகள் மூலம் இதற்கான முழுமையான காரணத்தைக் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com