\
ஒரு மாதத்திற்கு 100 ஜிபி! ஜியோவின் ஃபைபர் திட்டம் - கசிந்தது தகவல்கள்

ஒரு மாதத்திற்கு 100 ஜிபி! ஜியோவின் ஃபைபர் திட்டம் - கசிந்தது தகவல்கள்

ஒரு மாதத்திற்கு 100 ஜிபி! ஜியோவின் ஃபைபர் திட்டம் - கசிந்தது தகவல்கள்
Published on

ரிலையன்ஸ் ஜியோவின் ஃபைபர் திட்டம் குறித்து ஜியோ இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 

ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஜியோ அறிமுகமான நாள் முதல் தற்போது வரை தனது வாடிக்யைாளர்களுக்காக பல்வேறு புதிய புதிய சலுகைகளை அளித்து வருகிறது. 
இந்நிலையில் ஜியோ இணையதளத்தின் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட ஒரு சில தவறு காரணமாக, ஜியோ ஃபைபர் பிளான் தொடர்பான சில தகவல்கள் கசிந்துள்ளது. 
அதில், ஜியோ ஃபைபர் பிளான் மூலம் தலா 1 மாதத்திற்கு 100 எம்பிபிஎஸ்(Mbps) வேகத்தில் 100 ஜிபி டேட்டா என 3 மாதத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இணைப்பு கட்டணமாக 4500 ரூபாய் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, அஹமதாபாத், டெல்லி, ஹைதராபாத், ஜெய்பூர், கொல்கத்தா, மும்பை, சூரத், வதோதரா மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள தகவல்களும் கசிந்துள்ளன. இந்த திட்டம் தீபாவளியை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com