அறிவோம் அறிவியல் 6 | சூரிய குடும்பத்தின் வித்தியாசமான கிரகம்... வீனஸின் மர்மங்கள்!

அறிவோம் அறிவியலில் இன்று வீனஸ் அதாவது வெள்ளி கிரகத்தைப்பற்றி பார்க்கலாம்.
வீனஸ்
வீனஸ்நாசா

நீங்கள் பிரபல எழுத்தாளர்களின் கதைகளைப் படிக்கும்பொழுது, ’நிலவை போன்று முகம்.... அதோ வானத்தில் விடிவெள்ளி தெரிந்து விட்டது.... ’ இது போன்ற உவமைகளை ஆசிரியர்கள் தனது கதைகளில் எதார்த்தம் ததும்ப எழுதுவதை கண்டிருப்பீர்கள். இதில் குறிப்பிடப்படும் நிலவு நமக்கு நன்றாகவே தெரியும்... ஆனால் விடிவெள்ளி...?

அதுவும் தெரியும், ஏனெனில் விடிவெள்ளிதான் நாம் இன்று பார்க்கப்போகும் வீனஸ் கிரகம். அதாவது தமிழில் வெள்ளி கிரகம்.

வீனஸ் - பூமியின் சகோதரி

இது சூரியனிலிருந்து இரண்டாவது கிரகமாக அமைந்துள்ளது. இதன் அளவு, அமைப்பு அனைத்தும் அச்சசப்பில் பூமியைப்போன்று இருப்பதால், இதை பூமியின் சகோதரி என்று பேச்சு வழக்கத்தில் கூறுவதுண்டு.

இதன் தூரம் என்று பார்த்தால் சூரியனை விட பூமிக்கு அருகாமையில் இருப்பதால், நாம் சாதாரணமாக ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தாலே எல்லா நட்சத்திரங்களை விட வீனஸ் மிகவும் பிரகாசமாக பளீச் என்று தெரியும். சில சமயம் சூரியன் காலை உதித்தபிறகும் ஆகாயத்தில் வெறும் கண்களால் நாம் இதை பார்க்கமுடியும்.

உயிரினங்கள் வாழத் தகுதியுள்ளதா?

பூமியைப்போல் இருப்பதால் இது உயிரினங்கள் வாழத்தகுதியானதா என்று கேட்டால், அதுதான் இல்லை. ஈயத்தை உருக்கும் அளவுக்கு வெப்பமான கிரகம். சொல்லப்போனால் புதனைவிட வெப்பம் அதிகம். பூமியை போன்று வளிமண்டலம் கொண்டது. ஆனால் இதன் வளிமண்டலமானது மிக அதிக தடிமனானது. இதில் இருக்கும் அடர்ந்து பரந்த மேகங்கள் பெரும்பாலும் சல்பூரிக் அமிலத்தால் ஆனவை. உள்ளே கூட நுழைய முடியாது.

வீனஸ்
அறிவோம் அறிவியல் 5 | புதன் கிரகத்தில் குடியேறலாமா?

வெப்பநிலை..

வீனஸின் மேற்பரப்பில் சுமார் 50 கிலோ மீட்டர் வரை வெப்பநிலையானது 86 முதல் 158 பாரன்ஹீட் (30 முதல் 70 செல்சியஸ்) வரை இருக்கும். அப்படி என்றால் தரை எத்தனை வெப்பமாக இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். அதேபோல் இந்த உயரத்தில் இருக்கும் அழுத்தமானது பூமியின் மேற்பரப்பில் இருக்கும் அழுத்தத்தை போல இருக்குமாம். இப்பகுதியில் காற்று சுமார் (360 kph) வேகத்தில் வீசுமாம். ‘ஆகா காற்று...’ என்று ஆனந்தப்படாதீர்கள். அது அத்தனையும் கார்பண்டை ஆக்ஸைடு நிரம்பிய அனல் காற்று. இதில் பனி படிகங்கள் அல்லது இரும்பு குளோரைடு எனப்படும் இரசாயனங்கள் மிகமிக குறைவு... இந்த கிரகத்தில் லட்சக்கணக்கான எரிமலைகள் மற்றும் சிதைந்த மலைகள் அதிகமாக உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேற்கே உதிக்கும் சூரியன்

பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுற்றுகிறது என்றால், வீனஸ் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி அதாவது எதிர்புறமாக சுற்றுகிறது. இதனால் வீனஸில் சூரியன் மேற்கே உதித்து கிழக்கில் மறைகிறது. சூரிய குடும்பத்தில் இருப்பது ஒரே ஒரு சூரியன்தான். ஆனால், ஒரு கிரகத்தில் கிழக்கிலும், ஒரு கிரகத்தில் மேற்கிலும், ஒரு கிரகத்தில் சிறியதாகவும், என்று இப்படி பலபல அவதாரம் எடுக்கிறது சூரியன். கற்பனை செய்து பாருங்கள் எப்படி இருக்கும் என்று.

அதே போல் வீனஸ், தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 584 நாட்கள் ஆகுமாம். அதாவது அங்கு நம்முடைய ஒருநாள் என்பது 584 நாட்கள். (நிலவு கூட பரவாயில்லை... நாள் ஒன்றுக்கு 30 நாட்களைத்தான் எடுத்துக்கொள்கிறது. வீனஸை பாருங்கள், எப்படி அன்னநடைப்போட்டு நகர்கிறது என்று...) அத்தனை மெதுவாக சுற்றும் ஒரு சோம்பேரி கிரகம். இதற்கு நிலவு கிடையாது.

Venera
Venera

சோவியத் யூனியனின் ஆய்வு

இந்த கிரகத்தின் வளிமண்டலத்திற்குள் புகுந்து உள்ளே செல்வது என்பது கடினமான ஒன்று என்றாலும், சோவியத் யூனியன் வீனஸை ஆராய்ச்சி செய்ய நினைத்தது. அதனால் வெனெரா திட்டத்தின் படி 1961 மற்றும் 1984 இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் (Venera) ராக்கெட்டை அனுப்பி 10 முறை வீனஸை ஆய்வு செய்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் லேண்டர்கள் ஆகாசத்தை பிளந்து செல்வதற்கு முன்னதாக எரிந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு ஆய்வு கருவியானது 23 நிமிடங்கள் நீட்டித்து சில புகைப்படங்களை எடுத்தது. அதில் வீனஸின் கந்தக மஞ்சள் நிறத்தில் இருக்கும் வானத்தையும், பாறையான நிலப்பரப்பையும் புகைப்படம் எடுத்தபிறகு அந்த ஆய்வு கருவியும் உயிரை விட்டுள்ளது.

இனி அடுத்த வாரம் வேறொரு கிரகத்துடன்...

வீனஸ்
அறிவோம் அறிவியல் 4 | நட்சத்திரங்கள் மின்னுவது எப்படி தெரியுமா? வளிமண்டலத்தின் சிறப்புகள் என்னென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com