ஐபோன் 15 மொபைலுக்கும், இஸ்ரோவுக்கும் இப்படியொரு தொடர்பா! வியக்க வைக்கும் தகவல்!

உலகில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோனுக்கும் இந்திய விண்வெளி ஆய்வுமையமான இஸ்ரோவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதுகுறித்த விவரங்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

உலகில் இருக்கும் மொபைல் விரும்பிகள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த iphone 15 ப்ரோ வகை மொபைல் கடந்த செவ்வாய் அன்று வெளிவந்துள்ளது. முந்தைய iphoneகளின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளைவிட அதிக திறனோடு தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டைட்டானியம் வகை மெட்டல் பாகமும், கேமரா மற்றும் ப்ராசசர் போன்றவையும் மிக அதிக திறனோடும் முதல்முறையாக டைப் சி சார்ஜர் இணைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 15 மாடலில் இருக்கும் ஜிபிஎஸ் அமைப்பு இஸ்ரோவால் உருவாக்கப்பட்டுள்ள NaviC அமைப்பின் துணை கொண்டு செயல்படுகிறது. இனி ஐபோன்களில் அமெரிக்காவின் GLONASS, ஐரோப்பிய யூனியனின் Galileo, ஜப்பானின் QZSS, சீனாவின் BeiDou மற்றும் இந்தியாவின் NavIC ஆகிய அமைப்பின் மூலம் இருப்பிட தரவுகள் சேகரிக்கப்படுகிறது.

Navigation with Indian Constellation ஆன NavIC இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட ஜிபிஎஸ் தொடர் அமைப்பாகும். அதாவது ஏழு செயற்கைக்கோள்களின் உதவியுடன் தரை கட்டுப்பாட்டை இணைக்கும் வகையில் வலைப் பின்னல் அமைப்பைபோல இந்த NaviC சிஸ்டம் 24 மணி நேரம் செயல்படும் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com