மாணவர்களிடையே யோகா செய்து, நடனமாடிய ரோபோ! திருச்சி மாநகராட்சி பள்ளியில் சுவாரஸ்ய நிகழ்வு! #Video

திருச்சி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் யோகாசனம் செய்து, மாணவர்கள் மத்தியில் நடனமாடியுள்ளது ஒரு ரோபோ!

அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து பல வகைகளில் முயற்சிக்கிறார்கள். இதில் ஒரு நிகழ்ச்சியாக மாணவர்கள் புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக திருச்சி பீமநகரில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைபள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, தனியார் தொண்டு நிறுவனத்தினர் உதவியுடன் ரோபோடிக் பயிற்சி வகுப்பை நடத்தினார்கள் அதிகாரிகள்.

மாணவர்கள் மத்தியில் நடனமாடும் ரோபோ!
மாணவர்கள் மத்தியில் நடனமாடும் ரோபோ!

இதில் “மாணவர்கள் கல்வித்திறனை வளர்த்துக் கொண்டு சமுதாயத்திற்கு நல்லது செய்யும் ரோபோ இயந்திரங்களை தயாரிக்க வேண்டும்” என வல்லுநர்கள் வலியுறுத்தினர். மாணவர்களிடையே இந்த ரோபோக்கள் யோகாசனம் செய்ததும் நடனமாடியும் கண்கவர் வகையில் அமைந்தன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com