இனி ஒளியைப் பயன்படுத்தி பிரிண்ட் எடுக்கலாம்..!

இனி ஒளியைப் பயன்படுத்தி பிரிண்ட் எடுக்கலாம்..!
இனி ஒளியைப் பயன்படுத்தி பிரிண்ட் எடுக்கலாம்..!

பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் பிரிண்ட் எடுத்தல் இன்றியமையாததாக உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள பிரிண்ட்டிங் தொழில் நுட்பம் செலவு பிடிக்கும் நிலையில், கலிபோர்னிய விஞ்ஞானிகள் ஒளி மூலம் பிரிண்ட் எடுக்கும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தத் செலவை குறைப்பதுடன் மிக எளிமையானது. இதற்காக சிறப்பு பேப்பர் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. அந்த தாளில் வண்ணத்திற்காக பிரஸ்ஷியன் நீலம் உபயோகப்படுத்தப்படுகிறது.

பேப்பரில் பிரஸ்ஷியன் நீலம் மற்றும் டைட்டேனியம் டை ஆக்சைடு என்ற வேதி கலவை மீது எலக்ட்ரான்களை செலுத்தும் போது தாளில் உள்ள எழுத்துக்கள் வெளிவந்து பிரதிபலிக்கிறது. இதன் மூலம் பேப்பரில் உள்ள எழுத்துகள் நீல வடிவில் பிரிண்ட் ஆகிவிடும். எழுத்துகள் இல்லாத பிற இடங்கள் வெள்ளை நிறமாக மாறும். இதன் வெப்பநிலையை 120 டிகிரி செல்சியஸ் வரை மாற்றும்போது வெவ்வேறு வண்ணங்களில் எழுத்துகள் பிரிண்ட் ஆகிறது.

எழுத்துகளின் நிறத்திற்காகவே பிரஸ்ஷியன் நீலம் மற்றும் டைட்டேனியம் டை ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பிரிண்ட் செய்யப்படுவது ஒரு வாரத்திற்கு அழியாமல் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதன்பின் பிரிண்ட் அழிந்துவிடும். ஆனால் அந்தப் பேப்பரை மீண்டும் பயன்படுத்தலாம். இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் அச்சடிக்க பயன்படும் மை, பேப்பர், மற்றும் மின்சாரம் போன்றவை மிச்சப்படுத்தபடுகிறது என்கிறார்கள் அந்த விஞ்ஞானிகள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com