குறைந்த விலையில் நிறைய சிறப்பம்சங்கள்! இந்த வாரம் இந்தியாவில் வெளியாகும் மொபைல் போன்கள்!

மார்ச் மாதம் முடிவடைய உள்ள நிலையில் மோட்டோரோலா மற்றும் ஜியோமி நிறுவனங்கள், தங்களுடைய அடுத்த மொபைல் சீரிஸை இந்த வாரம் வெளியிடுகின்றன.
குறைந்த விலையில் நிறைய சிறப்பம்சங்கள்! இந்த வாரம் இந்தியாவில் வெளியாகும் மொபைல் போன்கள்!

மார்ச் மாதம் முடிவடைய உள்ள நிலையில் மோட்டோரோலா மற்றும் ஜியோமி நிறுவனங்கள், தங்களுடைய அடுத்த மொபைல் சீரிஸை இந்த வாரம் வெளியிடுகின்றன.

ரெட்மியை பொறுத்தவரையில் Redmi Note 12, Redmi 12C ஸ்மார்ட் போன்களும், மோட்டோவை பொறுத்தவரையில் Moto G13 ஸ்மார்ட்போனும் வெளியிடப்படுகின்றன.

Redmi Note 12 :

ரெட்மி நோட் 12 சீரிஸில் அடுத்த வெளியீடாக அறிவிக்கப்பட்டுள்ள ரெட்மி நோட் 12, நோட் 12 ப்ரோ+, ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 5G வரிசையில் சேருகிறது. 4ஜி நெட்வொர்க்குடன் அறிமுகப்படுத்தப்படும் இந்த ஸ்மார்ட் போன், வரும் மார்ச் 30ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

* 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 4G SoC ஆல் இயக்கப்படும்.

* 8ஜிபி ரேம் உடன் கூடுதலாக 11ஜிபி வரை ரேம் அனுமதிக்கப்படுகிறது.

* 50 மெகாபிக்சல் சென்சார் உட்பட மூன்று பின்புற கேமரா இடம்பெறுகிறது.

* 33W அதிவேக சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி இடம்பெறுகிறது.

விலையை பொறுத்த வரை ரூ.17,999 இல் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

Redmi 12C :

ஜியோமி-ன் பட்ஜெட் ஸ்மார்ட் போனாக அறிமுகமாகும் ரெட்மி 12சி விலையானது, அனைவரின் கைகளுக்கும் சேரும் வகையில் 10ஆயிரம் ரூபாய்க்குள் அடங்குகிறது. முன்னதாக சீனா மற்றும் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட, மீடியா டெக் ஹீலியோ G85 சிப்செட் பியூச்சர் தான் இடம்பெறும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

* 6ஜிபி ரேம் உடன் 5ஜிபி வரை நீட்டிக்கப்பட்ட ரேம் ஆதரவுடன் கிடைக்கிறது.

* 6.71-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 5000mAh பேட்டரி இடம்பெறுகிறது.

* பின்புறத்தில் கைரேகை சென்சாரோடு 50MP டூயல் ரியர் கேமரா இடம்பெறுகிறது.

* 10W சார்ஜிங் ஆதரவு, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் மைக்ரோ-USB போர்ட் போன்றவைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

விலையை பொறுத்தவரையில் பிளாக், ப்ளூ, க்ரீன் மற்றும் லேவண்டர் வண்ணங்களில் விலை மாறுபடுகிறது. 4GB RAM + 64GB இன்டர்னல் மெமரி மாடலின் விலை தோராயமாக ரூ. 8,400 ஆகவும், 4GB RAM + 128GB இன்டர்னல் மெமரி மாடலின் விலை தோராயமாக ரூ. 9,600 ஆகவும், 6GB RAM + 128GB இன்டர்னல் மெமரி மாடலின் விலை தோராயமாக ரூ. 10,800 ஆகவும் சந்தைப்படுத்தப்படுகிறது.

Moto G13 :

மோட்டோரோலா அறிமுகப்படுத்தும் இந்த மாடலானது முன்னர் ஐரோப்பிய சந்தைகளில் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவில் ரூபாய் 12ஆயிரத்தில் தொடங்கி 16ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்படவிருப்பதாக தெரிகிறது.

சிறப்பம்சங்கள்

* மீடியாடெக் ஹெலியோ G85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

* 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.

* 4GB + 128GB ரேம் மெமரி ஸ்டோரேஜ்

* 50MP மெய்ன் கேமராவோடு, 10W சார்ஜிங் ஆதரவுடன் 5000 mAh பேட்டரி இடம்பெறுகிறது.

விலையை பொறுத்தவரையில் லேவண்டர், பிளாக், ரோஸ் கோல்ட் என 3 வண்ணங்களில் வேறுபடுகிறது. 4GB + 128GB ரேம் மெமரியோடு வரும் மாடலானது தோராயமாக ரூ. 16,000 ஆகவும், குறைவான ஸ்டோரேஜ் மெமரியோடு வரும் மாடலானது ரூ. 12,000 ஆகவும் விற்கப்படவிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com