உலக மக்கள் தொகையில் 76 சதவீதம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்படுள்ளதாக ஆக்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உடல் பருமன் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில் உலக மக்கள் தொகையில் 76 சதவீதம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவித்துள்ளது. மேலும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கடந்த மூன்று நான்கு தசாப்தங்களில் தான் அதிகரித்திருப்பதாகவும், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் மக்களிடம் அதிகம் கவனம் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் உலக மக்கள் தொகையில் 49 சதவீதம் பேர் குண்டானவர்கள் என்றும் குண்டாவதற்கு உடலில் சேரும் கொழுப்பு தான் முக்கிய காரணம் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த உடல் பருமன் அனைத்து வயதினரையும் பாதிக்கும் என்றும் உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.