கூகுளைப் பயன்படுத்தி வேலைகளைத் திட்டமிடலாம்..!

கூகுளைப் பயன்படுத்தி வேலைகளைத் திட்டமிடலாம்..!
கூகுளைப் பயன்படுத்தி வேலைகளைத் திட்டமிடலாம்..!

நாம் அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளை நினைவு படுத்த கூகுள் நிறுவனத்தின் கூகுள் கீப் என்ற செயலி உதவுகிறது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனமான கூகுள், தானியங்கி கார்கள், ஸ்மார்ட் கான்டாக்ட் லென்ஸ்கள் மற்றும் இணையத்தள ஒளிவீசும் பலூன்கள் போன்ற பல சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் கீப் கில்லர் நோட்ஸ் அல்லது ரிமைண்டர் ஆப் ஆகும். இதனை கணினி மற்றும் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியும். இதை பயன்படுத்தி நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை பதிவு செய்து விட்டால் அதைச் சரியான நேரத்தில் நினைவூட்டும். பல நிறங்களில் குறிப்புகளை குறித்து வைக்க உதவும் செயலி கூகுள் கீப்.

கூகுள் டைமர்

இது ஒரு பயனுள்ள செயலி. இந்த செயலி நமது வேலை நேரத்தைத் திட்டமிட்டு கொடுக்க உதவுகிறது. வேலை முடிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பதிந்துவிட்டால் போதும், அந்த வேலையை செய்து கொண்டிருக்கும்போதே அதை செய்து முடிக்க இன்னும் எத்தனை மணி நேரம் மீதமிருக்கிறது எவ்வளவு வேகத்தில் செயல்பட்டால் இலக்கை அடையலாம் என்பது போன்ற பல தகவல்களை கொடுக்கும். இதனால் நமது நேர விரயம் தவிர்க்கப்பட்டு வேலையை விரைவாக முடிக்க முடியும்

கூகுள் ஸ்கை

கூகுள் ஸ்கை மூலம் பிரபஞ்சத்தின் புகைப்படங்களை பார்க்க முடிவதோடு விண்வெளியில் நிகழும் பல விஷயங்களையும் அறிந்து கொள்ள முடியும். கூகுள் ஸ்கை சேவையை தொலைநோக்கி போன்று பயன்படுத்தி விண்வெளியை பார்த்து ரசிக்க முடியும்.

கூகுள் புக்ஸ்

கூகுள் புத்தகங்கள் அல்லது கூகுள் புக்ஸ் என்பது கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் சேவை. இதன் மூலம் உரை மாற்றப்பட்ட தேடும் வகையிலான மென்னூல்களை இணையத்தில் படிக்கலாம். இதில் 1500 மற்றும் 2008 ஆம் ஆண்டுக்கு இடையே வெளியிடப்பட்ட 5.2 மில்லியன் புத்தகங்களின் வார்த்தைகளை தேடும் வசதி உள்ளது.

கூகுள் இன்புட் டூல்ஸ்

கூகுள் இன்புட் டூல்ஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்து அதனை நமது கணினியில் உள்ளீடு செய்து பயன்படுத்த வேண்டும். இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்யாமலும் இணைய வசதி மூலமும் பயன்படுத்த முடியும். மேலும் இதில் 80 வெவ்வேறு மொழிகளில் தட்டச்சு செய்யவும் பயன்படுத்த முடியும்.

கூகுள் ஆர்ட்

கலையில் அதிக ஆர்வம் கொண்டவர்களுக்கு கூகுள் ஆர்ட் ப்ராஜக்ட் பயன்படுகிறது. இதை கொண்டு உலகின் சிறந்த கலைகளை ஆன்லைனில் பார்த்து ரசிக்க முடியும். அதுமட்டுமின்றி, உலகின் தலைசிறந்த மற்றும் பெருமை வாய்ந்த அருங்காட்சியகங்கள், கண்காட்சியகங்கள் போன்றவற்றை இணையம் மூலம் நாமே நேரில் சென்று நடந்து பார்ப்பது போன்ற முப்பரிமாணத் தோற்றத்தில் காண முடியும்.

கூகுள் ஸ்காலர்

கல்வி பயல்வோருக்கு ஏற்ற தரவுகளை படிக்க பயன்படுவது கூகுள் ஸ்காலர் ஆப். கட்டுரைகள், கல்வித் துறை சார்ந்த பதிப்புகள், இணைய வெளி தகவல் சேமிப்புகள், ஆய்வுச் சுருக்கங்கள் மற்றும் நீதிமன்றம் வெளியிடும் கருத்துகள் போன்றவை குறித்து அறிந்து கொள்ள கூகுள் ஸ்காலர் உதவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com