அன்லிமிடட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் வெறும் ரூ.7 இல்... வோடஃபோன் ’சூப்பர் ஹவர்’

அன்லிமிடட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் வெறும் ரூ.7 இல்... வோடஃபோன் ’சூப்பர் ஹவர்’

அன்லிமிடட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் வெறும் ரூ.7 இல்... வோடஃபோன் ’சூப்பர் ஹவர்’
Published on

ஜியோவின் ஆதிக்கத்திற்கு பிறகு பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணச் சலுகை மற்றும் சிறப்பு டேட்டா ஆஃபரை அறிவித்தப்படி உள்ளன. அந்த வகையில் வோடபோன் நிறுவனம் ’சூப்பர் ஹவர்’ எனும் சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

வோடஃபோன் தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு இலவச வோடபோன்-டூ-வோடபோன் உள்ளூர் அழைப்புக்கள் மற்றும் வரம்பற்ற 4ஜி/3ஜி தரவு போன்ற வரம்பற்ற சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் வோடபோன் ’சூப்பர் ஹவர்’ சலுகை மூலம் அன்லிமிடட் இணையம் மற்றும் வாய்ஸ் கால்களை இலவசமாக 1 மணிநேரம் பயன்படுத்தலாம் எனக்கூறப்பட்டுள்ளது. 

வோடபோன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் சூப்பர் ஹவர் சலுகைகளை ரீசார்ஜ் செய்வதின் மூலமாகவும், போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் அந்தந்த யூஎஸ்எஸ்டி (USSD)-ஐ டயல் செய்வதன் மூலமும் இந்த ஆஃபரை பெறலாம். சூப்பர் ஹவர் சலுகையை 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1 வரை ரீசார்ஜ் செய்யலாம். ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் இவ்வகை பேக்குகளை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com