ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க...

ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க...
ஆபத்தான ஏழு மொபைல் அப்ஸ்!: பணத்தை பறிகொடுத்துடாதீங்க...

சில ஸ்மார்ட்போன் அப்-கள் மூலம் ஆன்லைனில் பணம் பறிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது வங்கிகளுக்கு சென்று பணம் எடுப்பது என்பது பெரும்பாலும் குறைந்துவிட்டது. அதிகப்படியான மக்கள் தங்கள் தேவைகளை ஏடிஎம் மையங்களுக்கு சென்று பூர்த்தி செய்துகொள்கின்றனர். இதிலும் பலர் மொபைல் அப்-கள் மூலமே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்கின்றனர். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் முதல் வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல் வரை அனைத்திற்கு மொபைல் அப்-கள் மூலமாக பணம் செலுத்த முடியும். 

இந்த நவீன மயமும், டிஜிட்டல் மயமும் எவ்வளவு வளர்ந்து வருகிறதோ, அதைவிட வேகமாக டிஜிட்டல் மற்றும் நூதன ஆன்லைன் திருட்டுகள் வளர்ந்து வருகிறது என்பதை யாரலும் மறுக்க முடியாது. வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலே அவர்களின் வங்கிக்கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்படுவது, க்ரெடிட் கார்டை நீங்கள் உபயோகிக்காமலே பணத்தை பறிகொடுப்பது போன்ற நூதன ஆன்லைன் திருட்டுகள் நாள்தோறும் காவல்நிலையங்களில் குவிந்து வருகின்றன. 

இதில் பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் பிடிபடுதே இல்லை. ஏனெனில் பணம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதை கண்டறிவதே முடியாத நிலையாகிவிடுகிறது. இதற்கு காரணம் சில தேவையற்ற லிங்க்ஸ் மற்றும் மொபைல் அப்-களை பயன்படுத்துதான் என சைபர் கிரைம் காவலர்களும், ஆன்லைன் நிபுணர்களும் கூறுகின்றனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 7 அப்-கள் ஆபத்தானவை என்று தெரியவந்துள்ளது.

அபாயகரமான 7 அப்-கள்:

க்யூஆர் கோட் ஃப்ரீ ஸ்கேன் (QR Code Free Scan)

க்யூஆர் கோட் ஸ்கேன்னர் ப்ரொ (QR Code Scanner Pro)

க்யூஆர் கோட் ஸ்கேன் பெஸ்ட் (QR Code Scan Best)

க்யூஆர் கோட் / பார்கோட் ஃப்ரீ ஸ்கேன் (QR Code / Barcode Free Scan) 

க்யூஆர் மற்றும் பார்கோட் ஸ்கேன்னர் (QR & Barcode Scanner)

ஸ்மார்ட் காம்பஸ் (Smart compass)

ஸ்மார்ட் க்யூஆர் ஸ்கேன்னர் மற்றும் ஜெனரெட்டர் (Smart QR Scanner and Generator)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com