இந்தியாவில் 55 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கள் விற்பனை அதிகரிப்பு!

இந்தியாவில் 55 அங்குல அளவு கொண்ட பெரிய திரை ஸ்மார்ட் டிவிக்கள் விற்பனை வேகமாக அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
55 அங்குல தொலைக்காட்சி
55 அங்குல தொலைக்காட்சிமுகநூல்

இந்தியாவில் 55 அங்குல அளவு கொண்ட பெரிய திரை ஸ்மார்ட் டிவிக்களின் விற்பனையானது வேகமாக அதிகரித்து வருகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

smart screen
smart screenமுகநூல்

இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், “கடந்த ஓராண்டில் மட்டும் 55 அங்குல ஸ்மார்ட் டிவிக்கள் விற்பனை 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. விலை குறைவு, திரையரங்க அனுபவத்தை வீட்டில் பெற விரும்புவது ஆகிய காரணங்களால் பெரிய திரை கொண்ட ஸ்மார்ட் டிவிக்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஓடிடி தளங்கள் இதற்கு முக்கிய காரணம்.

55 அங்குல தொலைக்காட்சி
14 நாள் நீடிக்கும் பேட்டரி! அறிமுகமானது MI SMART BAND 7 - டாப் 7 சிறப்பம்சங்கள்!

8GB Memory, டால்பி சான்று உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய தொலைக்காட்சிகளுக்கு தற்போது அதிகளவு தேவை உள்ளது. 55 அங்குல தொலைக்காட்சிகளுக்கு வரவேற்பு அதிகரிக்க தொடங்கியிருந்தாலும் ஒட்டுமொத்த ஸ்மார்ட் டிவி சந்தையில் 32 மற்றும் 43 அங்குல தொலைக்காட்சிகளே தற்போது ஆதிக்கம் செலுத்துவருகின்றது. இந்த அளவு டிவிக்கள் மட்டும் 71 சதவிகிதம் சந்தைப்பங்கை வகிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஸ்மார்ட் டிவிக்களின் சராசரி விலை ஓராண்டில் 3 சதவிகிதம் குறைந்துள்ளது என்று ஆய்வின் முடிவுகள் கூறுகிறது” என்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com