இளசுகளை ஈர்க்கும் 3டி டாட்டூஸ்

இளசுகளை ஈர்க்கும் 3டி டாட்டூஸ்
இளசுகளை ஈர்க்கும் 3டி டாட்டூஸ்

ஃபேஷன், அழகு இதையெல்லாம் தாண்டி இன்றைய இளசுகளை வெகுவாக ஈர்த்து வருகிறது டாட்டூஸ் கலாசாரம். மேலை நாடுகளில் மட்டுமே உலாவந்த டாட்டூஸ் கலாச்சாரம் இந்திய இளைஞர்களையும் விட்டுவைக்கவில்லை.

முற்காலத்திய ‘பச்சைகுத்துதல்’ பழக்கமே நவநாகரிகமாக மாறி டாட்டூஸ் ஆக உருவெடுத்துள்ளது. திரைப்பட நடிகர், நடிகைகள், மாடல்கள், பிரபலங்களிடம் மட்டுமே ஃபேஷனில் இருந்த இந்த டாட்டூ மோகம், இன்று மாணவர்களையும் ஈர்த்துள்ளது.

அழகு ஆபத்தில் முடியும் என்பது போல டாட்டூஸ் போடுவதால் ரத்த நாளங்கள், சரும பாதிப்புகள், தோல் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கும் போதிலும் டாட்டூஸ் மேல் உள்ள ஆர்வமும் ஆசையும் பாதிப்புகளை மறைத்துவிடுகின்றன.

தற்காலிகமாக போடும் டாட்டூ, நிரந்தர டாட்டூ என இரண்டு வகை உண்டு. தற்காலிக டாட்டூ ஸ்டிக்கர் ஒட்டி எடுப்பது போல குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அழிந்துவிடும். நிரந்தர டாட்டூ அழியாமால் இருக்கும். முதலில் பெயரை மட்டுமே டாட்டூஸ் போட்டு கொள்வது வழக்கம். ஆனால் தற்போது அழகுக்காக பல வித்தியாசமான வடிவங்களை உடலில் டாட்டூவாக போட்டுகொள்வது அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஆண், பெண் என இருவரும் காது, மூக்கு மட்டுமின்றி புருவங்களிலும் தோடு குத்திக்கொள்ளும் பேஷன் ட்ரெண்டாக இருந்தது. டாட்டூஸ் மட்டுமின்றி தோல் மீது விதவிதமான வடிவங்களில் தையல் போட்டுக்கொள்வது சில நாட்களுக்கு முன் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது MIT பொறியாளர்கள் எலக்ட்ரானிக் மற்றும் ஸ்மார்ட் மை டெக்னாலஜிஸ் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி டாட்டூவினை உருவாக்கியுள்ளனர். இந்த டாட்டூஸ் உயிருள்ளதும் தற்காலிகமானது ஆகும். அதாவது இந்த வகை டாட்டூஸ் குளிர், வெப்பம் மற்றும் தொடு உணர்தல் போன்ற தூண்டுதல்களை டாட்டூஸ் உணர்பவையாக இருக்கும் என MIT பொறியாளர்கள் கூறுகின்றனர். தோலின் தன்மையை உணரக்கூடிய இந்த டாட்டூஸ்கள் பாக்ட்டீரியா செல்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்ட்டீரியா செல்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த டாட்டூஸ் மரம் போன்ற அமைப்பில் இருப்பதுடன் ஒன்றிற்கு மேற்பட்ட வண்ணங்களை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி வேதிப்பொருட்கள் டாட்டூஸ்களின் மேல் படும்போது ஒளிரும் தன்மை கொண்டதாக உருமாறுகிறது. மேலும் முப்பரிமாண (3டி) வடிவத்தில் இந்த டாட்டூஸ் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டாட்டூஸ் தற்போது வெளிநாட்டு இளைஞர்கள் மத்தியில் உலா வர ஆரம்பித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com