\
ஐபோன் 8ல் 3டி செல்ஃபி கேமரா?

ஐபோன் 8ல் 3டி செல்ஃபி கேமரா?

ஐபோன் 8ல் 3டி செல்ஃபி கேமரா?
Published on

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் ஐபோன் 8 மாடலில் 3டி தொழில்நுட்பத்தில் புகைப்படங்களை எடுக்கும் வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல புதிய அம்சங்களை களமிறக்கும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 8 மாடலை இந்த ஆண்டு வெளியிடவுள்ளது. இதுவரை எந்த போனிலும் இல்லாத வகையில், செல்ஃபி கேமராவில் இன்பிராரெட் மாட்யூல் மற்றும் 3D வடிவில் புகைப்படங்களை பதிவு செய்யும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஐபோனில் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் மேம்பட்ட தரத்துடன் செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சோனி நிறுவனம் தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

4.7 இன்ச், 5.5 இன்ச் மற்றும் 5.8 இன்ச் என மூன்று வித டிஸ்ப்ளே அளவுகளில் ஐபோன் 8 போனினை எதிர்பார்க்கலாம். 3ஜிபி ரேம் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு மெமரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டலாம். ஐபோன் மற்றும் ஐபோன் 7s மாடல்களை விட ஐபோன் 8 விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 8 சோதனை முடிவடைந்து விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com