1050சிசி-ல் பறக்கும்.. ட்ரையம்ப் ட்ரிபுள் எஸ்: விலை ரூ.12.17 லட்சம் தான்!
ட்ரையம்ப் பைக் நிறுவனம் 2018 மாடல் ட்ரிபுள் எஸ் பைக்கை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தின் பிரபல பைக் நிறுவனம் ட்ரையம்ப். 1983ஆம் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் ஆரம்ப காலக்கட்டம் முதலே தரமான மற்றும் விலையுயர்ந்த பைக்குகளை வெளியீடு செய்து வருகிறது. ராயல் லுக் அளிக்கும் இந்த பைக்குகள் சாமானியர்களுக்கு சற்று கனவாகவுள்ளது என்று கூறலாம். ஏனெனில் இந்த பைக்குகளின் விலை அப்படி.
தற்போது 2018ஆம் ஆண்டின் ட்ரையம்ப் ட்ரிபுள் எஸ் பைக் வெளியிடப்பட்டுள்ளது. 1050 சிசி இன்ஜியன் பவருடன் வெளிவந்துள்ள இந்த பைக்கின் விலை ரூ.12.17 லட்சம் ஆகும்.
இதன் பெட்ரோல் டேங்க் 17.5 லிட்டர் பிடிக்கும். குறைந்த பட்சம் 2 லிட்டர் பெட்ரோல் இருந்தால் தான் இந்த பைக் ஸ்டார்ட் ஆகும். ஒரு லிட்டருக்கு 17 கிலோ மீட்டரே மைலேஜ் கொடுக்கும் இதில், சுமார் 300 கி.மீ வேகத்தில் செல்ல முடியும். செல்ஃப் ஸ்டார்ட் வசதியுடன் 6 கீர்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் எடை 186 கிலோ ஆகும். டிஜிட்டல் ஸ்பீட் மீட்டருடன், அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிகப்பு, கருப்பு, வெள்ளை ஆகிய மூன்று நிறங்களில் இது வெளிவந்துள்ளது.