கோவின் தளத்திலிருந்து 20000 பயனர்களின் தகவல்கள் கசிவு? மத்திய அரசு மறுப்பு 

கோவின் தளத்திலிருந்து 20000 பயனர்களின் தகவல்கள் கசிவு? மத்திய அரசு மறுப்பு 
கோவின் தளத்திலிருந்து 20000 பயனர்களின் தகவல்கள் கசிவு? மத்திய அரசு மறுப்பு 

இந்தியாவில் கடந்த 2021 ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் மக்கள் முன்பதிவு செய்து கொள்ளவும், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை டவுன்லோட் செய்யவும் இந்த தளம் உதவுகிறது. அதற்கு பயனர்கள் மொபைல் எண், ஆதார் விவரங்களை கொடுக்க வேண்டியுள்ளது. இந்த தளத்தை இந்திய அரசு நிர்வகித்து வருகிறது.  

இந்நிலையில் இந்த தளத்திலிருந்து சுமார் இருபதாயிரம் இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆன்லைனில் கசிந்ததாக சில செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன. அதனை மத்திய அரசு மறுத்துள்ளது. 

கோவின் தளத்தில் பதிவாகியுள்ள அனைத்து தகவல்களும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தரவுகள் எதுவும் கசியாவில்லை எனவும் உறுதி செய்துள்ளது. கோவின் தளத்தில் பயனர்களின் முகவரி விவரங்கள் சேகரிக்க படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கசிவு தொடர்பான செய்தி குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com