ராமேஸ்வரம்: ராட்சத பலூன் மூலம் செலுத்தப்பட்ட 100 சிறிய செயற்கைக்கோள்கள்!

ராமேஸ்வரம்: ராட்சத பலூன் மூலம் செலுத்தப்பட்ட 100 சிறிய செயற்கைக்கோள்கள்!

ராமேஸ்வரம்: ராட்சத பலூன் மூலம் செலுத்தப்பட்ட 100 சிறிய செயற்கைக்கோள்கள்!
Published on

ராமேஸ்வரத்தில் 100 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் ,விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் டாக்டர். அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை, கலாம் இல்லம் இராமேஸ்வரம், இந்திய விண்வெளி மண்டலம் (இந்திய ஸ்பேஸ் ஜோன்) மற்றும் மார்ட்டின் தொண்டு நிறுவனம் இணைந்து, 'டாக்டர் APJM அப்துல் கலாம் விண்வெளி ஆராய்ச்சி 'பேலோட் க்யூப்ஸ் 2021 நிகழ்வின் படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்கள், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில் ஈடுபாடுடைய மாணவர்கள், அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனைவராலும் இணைந்து வடிவமைக்கப்பட்ட 100 பெம்டோ செயற்கைக் கோள்கள் இரு இராட்சத பலூன் மூலம் விண்ணில் ஏவப்படது.


டிஜிசிஏ, பாதுகாப்பு அமைச்சகம், (புதுடில்லி) விமான தலைமையகம், (புதுடில்லி) விமானப்படை நிலையம், (தஞ்சாவூர்) மற்றும் இந்திய விமான நிலையம் ஆணையத்தின் (சென்னை) முறையான அனுமதியுடன் இச்சாதனை நிகழ்வு நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரமோஸ் ஏவுகணை திட்ட இயக்குனர் சிவராமன் பிள்ளை செயற்கைக்கோள்கள் ஸ்மால் ,நானோ, மைக்ரோ, பெம்டோ என மிக சிறியதாக உள்ளது.

இன்று விண்ணில் செலுத்தப்பட்ட இந்த பெம்டோ மிக சிறிய செயற்கைக்கோள்கள் விவசாயம், தகவல் தொலைத்தொடர்பு பயன்படுத்துவதாகவும் காற்றில் எவ்வளவு மாசு உள்ளது கார்பன்-டை-ஆக்சைடு, ஆக்சிஜன் அளவையும் இதன்மூலம் கண்டறியலாம் என்று தெரிவித்தார். மேலும் நிலவில் தண்ணீர் உள்ளதை இந்தியா தான் கண்டு பிடித்ததாகவும் 2024 இல் அமெரிக்கா நிலவுக்கு செல்வதற்கே திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


கதினியான் திட்டத்தில் ஆட்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாகவும் இதற்காக ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் ஒரு குரூப் ஆப் விமானிகளை தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நிலவில் ஹீலியம் 3 உள்ளதாகவும் அது யுரேனியத்தை விட நூறு மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்றும் பிரமோஸ் ஏவுகணை திட்ட இயக்குனர் சிவராம் பிள்ளை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com